செம்மரக் கடத்தல்காரர்கள் என்று ஆந்திராவில் வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
மரத்தை கூலிக்காக வெட்டி பிழைப்பு நடத்திய தொழிலாளர்கள்தான் கொல்லப்பட்டுள்ளனரே தவிர மரக்கடத்தல் செய்து கோடிக்கணக்கில் பணம் ஈட்டிய பெரிய மனிதர்கள், அவர்களுக்கு உடந்தையாக இருந்த காவல்துறை, வனத்துறை புல்லுறுவிகள், ஆசி வழங்கி ஆதாயம் பார்த்த அரசியல் புள்ளிகள் - இவர்கள் எல்லாம் எங்கோ பத்திரமாகத்தான் உள்ளார்கள். அவர்கள் மீது போலீசின் தோட்டாக்கள் என்றுமே பாயாது. அவர்களின் பணமும் அரசியல் செல்வாக்குமே குண்டு துளைக்காத கவசமாக அவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.
காவல்துறையை பார்த்ததும் கல்லெறிந்தார்கள். அதனால் சுட்டோம் என்பது வழக்கமான காவல்துறை வசனம்..
இத்தனை துப்பாக்கிகள் கொண்ட பெரும் காவல படையால் அவர்களை வளைத்துப் பிடித்து கைது செய்ய முடியாதா?
நிச்சயமாக இது திட்டமிட்ட படுகொலைதான்.
இயற்கை வளத்தை அழிப்பவர்களை கொல்வதில் தவறென்ன என்ற கேள்வி கூட துரதிர்ஷ்டவசமாக கேட்கப் படுகிறது.
எய்தவர்களை விட்டு விட்டு ஐநூறு ரூபாய், அறுநூறு ரூபாய் என்று கூலிக்கு வந்தவர்களை கொல்வதால் வன வளம் பாதுகாக்கப்படுமா? வேறு கூலிகளைக் கொண்டு அந்த மனிதர்கள் அதே தொழிலை தொடர்ந்து செய்யத்தான் போகிறார்கள்.
துப்பாக்கியை கையிலெடுத்துக் கொண்டு நீதிபரிபாலனம் செய்த காக்கிச்சட்டை அரக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆந்திர அரசு அதனைச் செய்யுமா?
லஞ்சம் வாங்கும் மோசடி காவல்துறை, வனத்துறை அரசியல்வாதிக பாதுகாப்பாக இருக்க கூலிக்காக மரம் வெட்டி பிழைப்பு நடத்திய தொழிலாளர்கள் பயங்கரவாதிகள் மாதிரி கொல்லப்பட்டு கிடப்பது கொடுமை.
ReplyDelete