Tuesday, January 23, 2024

கோயில் திறந்தாச்சு, அப்புறம் ????

 


பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் கோயில் கட்டி சாதனை செய்த டிமோ, அடுத்து பின் வரும் சாதனைகளை செய்யப்போகிறார்.

2014 ல் கொடுத்த வாக்குறுதிகள் படி . . . .

 அனைவரது வங்கிக் கணக்குகளிலும் பதினைந்து லட்ச ரூபாய் வரவு வைக்கப்படும்.

 ஆண்டுக்கு இரண்டு கோடி என்ற கணக்கில் பத்து வருடத்திற்குமாக சேர்த்து இருபது கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்.

 இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரித்து டாலரின் மதிப்பு குறைந்து விடும். ஒரு ரூபாய்க்கு நாற்பது டாலர் கிடைக்கும்.

 சமையல் எரிவாயுவின் விலை நூறு ரூபாயாகவும் பெட்ரோலின் விலை லிட்டர் ஐந்து ரூபாய் என்றாகி விடும்.

 இந்தியா முழுதும் அமைதிப் பூங்காவாகி மத நல்லிணக்கம் காப்பாற்றப்படும்.

 பெண்கள் மீதான கொடுமைகள் நின்று விடும். உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் கொடுமைகளே நிகழாது.

 தீண்டாமைக் கொடுமை அகன்று சமூக நீதி நிலவும்.

 கார்ப்பரேட்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்பட்டு தனி நபர் வருமான வரி குறைக்கப்படும்.

 வங்கியில் கடன் வாங்கி திருப்பித்தராத முதலாளிகள் இந்தியாவிற்கு இழுத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

 எல்லையைத் தாண்டி தீவிரவாதிகள் வருவது முற்றிலும் நின்று விடும்.

 சீனா, தான் ஆக்கிரமித்த இடங்களிலிருந்து வெளியேறி விடும்.

 இவை அத்தனையையும் டிமோ செய்து விடுவார்.

 நெஜமாவா?

 எத்தனையோ அயோக்கியத்தனம் செஞ்சுட்டாரு, இந்த நல்லதெல்லாம் செய்ய மாட்டாரா?

 அயோத்தி கோயிலில் இருக்கற ராமர் இதையெல்லாம் சொடுக்கு போடும் நேரத்தில் செய்ய டிமோவுக்கு சக்தி கொடுக்க மாட்டாரா?

 யாருப்பா அது? ராமருக்கே பிராணன் கொடுத்தவரு டிமோ, அவருக்கு சக்தி கொடுக்கற அளவுக்கு ராமருக்கு ஏதுய்யா சக்தின்னு கேட்கறது!

 பிகு: டிமோ இது நாள் வரை சாமானிய மக்களுக்கு கொடுத்ததையும் இனி கொடுக்கப் போவதையும் சிம்பாலிக்காக சித்தரிக்கும் புகைப்படத்தை எடுத்த அந்த புகைப்படக் கலைஞருக்கு பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment