Monday, January 1, 2024

காஜு கத்லி - இறுதியில் வெற்றி

 



கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து முயற்சித்து சொதப்பலான காஜுகத்லி இந்த வருட முதல் பதிவுக்காக முயன்ற போது இறுதியில் வெற்றிகரமாக வந்து விட்டது.

மூன்று, நான்கு யூட்யூப் சேனல்களைப் பார்த்து கடைசியில் ரிஸ்க் குறைவான செய்முறையாக திருமதி மல்லிகா பத்ரிநாத் அவர்களின் முறையை பின்பற்றி செய்தேன்.

முந்திரியை வறுத்து பின்பு பொடி செய்து தனியாக வைத்துக் கொண்டு முந்திரி அளவில் முக்கால் அளவில் சர்க்கரை சேர்த்து பாகு ஒற்றைக் கம்பி பதத்திற்கு வருகையில் அடுப்பை அணைத்து விட்டு கை விடாமல் கிளறி நன்றாக உருண்டு திரண்டு வருகையில் அதை சப்பாத்தி மாவு பிசைவது போல உருட்டி உருட்டி கடைசியில் தட்டில் போட்டு விள்ளை போட்டால் காஜுகத்லி தயார்.

சரியான வடிவம் வராவிட்டாலும் கூட கடைகளில் கிடைக்கும் அதே ருசி, அதே திடம்.

இனிப்பாக தொடங்கி விட்டது புத்தாண்டு. 

2 comments:

  1. இதில் பொடி செய்த முந்திரியை எப்போது போடுவது..

    ReplyDelete
    Replies
    1. சர்க்கரைப் பாகு ஒற்றைக் கம்பி பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு முந்திரி பொடியை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

      Delete