Friday, January 12, 2024

இப்படி மனசை புண்படுத்தறாங்களே!

 



 

அன்னபூரணி திரைப்படம் இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக சொல்லி அதை நெட்ப்ளிக்ஸ் தளத்தில்  திரையிடுவதை சங்கிகள் நிறுத்தி விட்டார்கள்.

 

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கரின் முகநூல் பதிவு பாவம் அவர்களின் மனதை இன்னும் அதிகமாக புண்படுத்தும்.

 

சிவனுக்கு இறைச்சி படைத்த கண்ணப்ப நாயனரின் செயலை பதிவு செய்துள்ள “பெரிய புராணம்” கூட சங்கிகளை புண்படுத்தும். ஆகவே அதனை தடைசெய்யக் கூட கலவரம் நடத்துவார்களா சங்கிகள்?

 

அன்னபூரணி திரவுபதி

 

மாமிசம் உண்பது ராமாயணத்தில் மட்டுமல்ல, மஹாபாரதத்திலும் வருகிறது என்கிறார் The Myth of the Holy Cow என்கிற நூலை (தமிழிலும் இருக்கிறது) டி. என். ஜா என்கிற வரலாற்றாசிரியர். அவர் கூறும் விவரங்களில் சில:

 

இம்சைக்கு எதிராகப் பேசிய தருமன் ருரு எனப்படும் மான்களை வேட்டையாடி தன் பாண்டவ சகோதரர்களுக்கும், திரவுபதிக்கும், காட்டில் வாழ்ந்த பிராமணர்களுக்கும் உணவு படைத்தார். கவுரவர்களின் சகோதரி துச்சலையின் கணவன் ஜெயத்ரதனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும், 50 மான்களின் இறைச்சியை உணவாகக் கொடுத்தாள். மேலும் தருமர் அவர்களுக்கு பல வகையான மான்கள், முயல், காட்டுப்  பன்றி, எருமை என அனைத்து வகையான விலங்குகளின் இறைச்சியைக் கொடுப்பார் என்றும் திரவுபதி கூறினாள்

 

விஷம் தடவாத அம்புகளைக் கொண்டு மான்களைக் கொன்ற பாண்டவர்கள் அவற்றின் இறைச்சியை பிராமணர்களுக்குக் கொடுத்த பின் தாமும் உண்டனர்.

 

ரந்திதேவன் என்கிற அரசனின் அரண்மனையில் தினமும் 2000 பசுக்கள் கொல்லப் பட்டன. அவற்றின் இறைச்சியும் தானியங்களும் பிராமணர்களுக்குக் கொடுக்கப் பட்டன

 

இப்படி ராமாயணத்திலும், மஹாபரதத்திலும், தர்ம சாஸ்திர நூல்களிலும் ஏராளமான விவரங்கள் இருப்பதாக ஜா தன் நூலில் குறிப்பிடுகிறார்.

 

No comments:

Post a Comment