Thursday, January 11, 2024

வாஷர், போல்ட், போயிங்கின் பிரச்சினை

 

போயிங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு விமானம் போயிங் 747 மேக்ஸ் 8.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 150 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.

ஏன்?

ஒரு விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதன் உள்ளே இருந்த ஒரு கதவு பிய்த்துக் கொண்டு விழுந்துள்ளது. இதே போல இன்னொரு விமானத்தில் இன்னொரு சிக்கல்.

என்ன காரணம்?

போல்ட் ஒன்றை சரியாக பொருத்தவில்லை. இன்னொரு விமானத்தில் ஸ்க்ரூ சிலது காணாமல் போயுள்ளது.

அதனால் அனைத்து விமானங்களையும் தரையிறக்கி விட்டார்கள். சோதித்து பார்த்தால் இது போன்ற குறைபாடுகள் நிறைய இருந்துள்ளன. 

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு விமானத்தில் வாஷர் ஒன்று இல்லை என்பது மட்டும்தான் பிரச்சினையாம்.

பிரச்சினைகள் சிறியதாக தோன்றலாம்.

40,000 அடி உயரத்தில் பறக்கையில் அது சிறிய பிரச்சினை அல்ல . . .

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் தயாராகும் பொருளில் இப்படிப்பட்ட அலட்சியம் நூற்றுக்கணக்கான உயிர்களை குடிக்கும்.

முதலாளித்துவம் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. 

1 comment:

  1. பறந்து கொண்டிருந்த விமானத்தில் போல்டு இல்லை, ஸ்குரு இல்லை.

    பறந்து கொண்டிருந்த விமானத்தில் ஜன்னலை திறந்து பார்த்தவருக்கு எது இல்லை?


    ReplyDelete