இந்த வருடம் கடந்த செவ்வாயன்று சென்னை புத்தக விழாவுக்குச் சென்றேன். அன்று காலைதான் கோவையிலிருந்து திரும்பியிருந்தேன். அடுத்து பெங்களூர் பயணம், சேலம் பயணம் என்றெல்லாம் இருப்பதால் வேறு நாள் இல்லாமல் அன்றுதான் செல்ல வேண்டியிருந்தது.
போதுமான அவகாசம் இல்லாததால் வழக்கம் போல எக்செல் ஷூட்டில் பட்டியல் போட்டுக் கொண்டு செல்ல முடியவில்லை. அதனால் கண்ணில் பட்ட முக்கிய அரங்குகளுக்குச் சென்று கையில் சிக்கியவற்றை வாங்கி வந்தேன். ரொம்பவும் சீரியஸான நூல்களுக்கு மத்தியில் இளைப்பாற இந்த முறை சரித்திர நாவல், துப்பறியும் நாவல் எல்லாம் வாங்கினேன். துவக்க கால வாசிப்பை நினைவுபடுத்திக் கொல்ல இப்போது சங்கர்லால் உடன் இருக்கிறார்.
இரண்டு முக்கிய எழுத்தாளர்களை சந்தித்த மகிழ்ச்சி உண்டு. “மௌனத்தின் சாட்சியங்கள்” மற்றும் “மயானக்கரை வெளிச்சம்” எழுதிய தோழர் சம்சுதீன் ஹீரா, “தாழிடப்பட்ட கதவுகள், முகாம் நூல்களின் படைப்பாளி தோழர் அ.கரீம் ஆகியோரே அவர்கள்.
இரண்டு சம்பவங்கள் மகிழ்ச்சி கொடுத்தது.
சந்தியா பதிப்பகத்தில் புத்தகங்களை வாங்கி விட்டு, பணத்தை கொடுத்து விட்டு பில்லை வாங்கிக் கொண்டு புத்தகங்களை அங்கேயே வைத்து விட்டு அடுத்த என்.சி.பி.ஹெச் அரங்கிற்கு வந்து விட்டேன். அங்கே என்னை சந்தியா பதிப்பக ஊழியர் தேடி வந்து விபரத்தைச் சொன்னார். “சிகரம் செந்தில்நாதன் நூலை வாங்கியுள்ளதால் பாரதி புத்தகாலயத்திலோ அல்லது என்.சி.பி.ஹெச் லேயேதான் இருப்பீங்கன்னு நினைச்சேன். சரியாயிடுச்சு” என்றார். அவருக்கு நன்றி சொல்லி புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.
அதே போல இன்னொரு அரங்கில் கல்கி ராஜேந்திரனின் “வண்டார்குழலி” நூலை வாங்க, அங்கே இருந்த ஊழியர்,” சார் இந்த புத்தகத்தோடு ஒரு போட்டோ எடுத்துக்கவா, சார் பாத்தா சந்தோஷப்படுவார்” என்றார். அடுத்தவர் மகிழ்ச்சியடைய நம்மால் ஒரு வாய்ப்பு என்பதால் அப்படியே அடுத்துக் கொண்டேன். அந்த படமும் மேலே உள்ளது.
இந்த வருடம் வாங்கிய நூல்களின் பட்டியல் கீழே உள்ளது. பட்டியலில் உள்ளதை யாராவது வாங்க விரும்பினால் உதவிகரமாக இருக்குமே என்று அரங்கின் எண்ணோடு பகிர்ந்து கொண்டுள்ளேன். முழு நிறைவு கிடையாது. ஒழுங்காக திட்டமிடலோடு சென்றிருந்தால் இன்னும் கூடுதலாக நூல்கள் வாங்கியிருப்பேன்.
வழக்கமாக ஒரு காபி குடிப்பேன். ஆனால் அதற்கான பகுதி சேறும் சகதியுமாக இருந்ததால் அந்த முய்ற்சியை கைவிட்டு விட்டேன். சென்னை போக்குவரத்து நெரிசலில் வேறு எங்கும் கூட காஃபிக்காக காரை நிறுத்த முடியாமல் போனது சோகமே.
நூல்
ஆசிரியர்
பதிப்பகம்
அரங்கு எண்
பக்கம்
கபர்
கே. ஆர்.மீரா தமிழில் மோ.செந்தில்குமார்
எதிர் வெளியீடு
F 61
112
மகாத்மா பிறந்த மண்ணில்
சிவசங்கரி
அன்னை புத்தகாலயம்
550
92
அந்த மரத்தையும் மறந்தேன், மறந்தேன் நான்
கே. ஆர்.மீரா தமிழில் சிற்பி பாலசுப்ரமணியம்
எதிர் வெளியீடு
F 61
140
கிடை
கி.ராஜநாராயணன்
காலச்சுவடு
N 2
60
பஞ்சும் பசியும்
தொ.மு,சி. ரகுநாதன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
F 49
324
தர்காக்களும் இந்து- இசுலாம் ஒற்றுமையும்
ஆ.சிவசுப்ரமணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
F 49
30
புதிய இந்தியா எனும் கோணல் மரம்
பரகால பிரபாகர் தமிழில் ஆர்.விஜயசங்கர்
எதிர் வெளியீடு
F 61
319
கொலை நிலம்
தியாகு - ஷோபா சக்தி
நாதன் பதிப்பகம்
572
95
மைல்ஸ் டு கோ
வெற்றிமாறன்
நாதன் பதிப்பகம்
572
170
தெய்வங்களும் பண்பாட்டு அசைவும்
தொ.பரமசிவம்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
F 49
200
ஒரு கூர்வாளின் நிழலில்
தமிழினி
காலச்சுவடு
N 2
270
சீதோபதேசம்
பாக்கியம் ராமசாமி
அன்னை புத்தகாலயம்
550
144
வானில் விழுந்த கோடுகள்
கலாபிரியா
சந்தியா பதிப்பகம்
125
கான்பூர் கலகம்
சர் ஜார்ஜ் ட்ரெவல்யன் தமிழில் சி.எஸ்.வெங்கடேஸ்வரன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
F 49
136
களம் கண்ட வேங்கைகள்
த்ஞ்சை கே.பக்கிரிசாமி
பாரதி புத்தகாலயம்
F 47
110
மரிச்ஜாப்பி - உண்மையில் நடந்தது என்ன?
ஹரிலால் நாத் - தமிழில் ஞா.சத்தீஸ்வரன்
பாரதி புத்தகாலயம்
F 47
330
காரான்
ம.காமுத்துரை
எதிர் வெளியீடு
F 61
144
கைவிடப்பட்ட காஷ்மீரும் பறிக்கப்பட்ட பாலஸ்தீனமும்
ஆசாத் எஸ்ஸா தமிழில் இ.பா.சிந்தன்
எதிர் வெளியீடு
F 61
296
கொத்தாளி
முஹம்மது யூசுப்
யாவரும் பதிப்பகம்
598 B
254
கபாடபுரம்
தீபம் நா.பார்த்தசாரதி
கவிதா பப்ளிகேஷன்ஸ்
F59
176
உரையாடல்களின் காலம்
சுகுணா திவாகர்
எதிர் வெளியீடு
104
நீர்வழிப் ப்டூஉம்
தேவி பாரதி
யாவரும் பதிப்பகம்
598 B
221
சில செய்திகள் சில படிமங்கள்
கலாபிரியா
சந்தியா பதிப்பகம்
175
பாரி படுகளம்
பிரளயன்
பாரதி புத்தகாலயம்
F 47
72
வண்டார்குழலி
கல்கி ராஜேந்திரன்
அன்னை புத்தகாலயம்
550
160
சங்கர்லால் துப்ப்றியும் நாவல்கள் பாகம் 3
தமிழ்வாணன்
மணிமேகலை பிரசுரம்
F 31
520
தில்லைக் கோயில்களும் தீர்ப்புக்களும்
சிகரம் ச.செந்தில்நாதன்
சந்தியா பதிப்பகம்
148
கல்வியில் நாடகம்
பிரளயன்
பாரதி புத்தகாலயம்
F 47
64
தமிழகக் கோட்டைகள்
விட்டல்ராவ்
பாரதி புத்தகாலயம்
F 47
231
5222
No comments:
Post a Comment