மகாத்மா
காந்தியை மட்டம் தட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை உயர்த்திப் பேசியுள்ளது ஆட்டுத்தாடி
ரெவி. அந்தாளுக்கு நேதாஜி மீதெல்லாம் மரியாதை கிடையாது. இவர்களின் குருநாதர் சாவர்க்கரின்
முதலாளியான பிரிட்டிஷார் கடை பிடித்த “பிரித்தாளும் சூழ்ச்சி” தந்திரம்தான்.
ஆட்டுத்தாடியின்
பேச்சில் கடுப்பானவர்களில் சிலர் காந்தியை உயர்த்திப் பேசுவார்கள், அதிலும் சிலர் நேதாஜியை
மட்டம் தட்டுவார்கள். நேதாஜியின் ஆதரவாளர்கள் காந்தியை மட்டம் தட்டுவார்கள். இப்படியே
இது ஒரு சர்ச்சையாக போகும். அதைப் பார்த்து ரெவி இளித்துக் கொண்டிருக்கும். ரெவியும் டமில் மியூசிக்கும் ஆட்டுக்காரனும் நிர்மலா
அம்மையாரும் பொய்களைப் பரப்பி கலவரத்தை தூண்ட முயற்சித்தது மறைந்து போய் விடும்.
வரலாறு
இல்லாததால் பொய்யான வரலாற்றை பரப்புகிறது ஆட்டுத்தாடி. மகாத்மா காந்தியின் வருகைக்குப்
பின்பே விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் இயக்கமாக மலர்ந்தது. நேதாஜியின் இந்திய தேசிய
ராணுவம், பிரிட்டிஷாருக்கு அச்சத்தை உருவாகியது. ஆனால் அவர் 1945 ஆகஸ்டில் மறைந்து
விட்டார். இந்திய விடுதலையை இனியும் தாமதிக்க
முடியாது என்ற நிலைமையை உருவாக்கியது 1946 ல் நடைபெற்ற கப்பற்படை மாலுமிகளின் புரட்சி.
பம்பாயில் நடைபெற்ற அப்போராட்டத்திற்கு துணை நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. இதெல்லாம் ஆட்டுத்தாடிக்கு தெரிந்திருந்தால் உளறிக்
கொண்டிருக்க மாட்டார்.
சாவர்க்கரை
வழிபடும் ஜந்துவிற்கு விடுதலை யாரால் வந்ததென்று எதற்கு கவலை? சுபாஷ் சந்திர போஸே சாவர்கரையும்
இந்துத்துவ சக்திகளையும் கழுவி ஊற்றியுள்ளார். அந்த ஆவணங்களை மீண்டும் உலா வர வைத்ததுதான்
ரெவியின் சதியால் விளைந்த பயன்.
சுபாஷ் சந்திர போஸ்:
மதவாதம் தன் அசிங்கமான தலையைத் தூக்கி முழு நிர்வாணமாக நிற்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களும் ஏழைகளும் விவரமறியாதவர்களும் கூட விடுதலைக்காக ஏங்குகின்றனர். இந்துக்கள் நாட்டில் பெரும்பான்மையாக இருப்பதால் இந்து ராஜ்ஜியம் வேண்டும் என்கிற குரல் கேட்கிறது. இவையெல்லாம் பயனில்லாத சிந்தனைகள். உழைக்கும் வர்க்கம் சந்திக்கும் பிரச்சினைகள் எதையாவது மதவாதம் தீர்க்க முடியுமா? அப்படிப்பட்ட எந்த அமைப்பாவது வ்றுமைக்கும் வேலைவாய்ப்பின்மைக்கும் தீர்வுகளை வைத்திருக்கிறதா? சாவர்க்கரும் இந்து மகாசபையும்
செய்யும் முஸலிம் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு நடைமுறையில் பிரிட்டிஷ் அரசுடன் அவர்களின் கூட்டுறவு என்பதே பொருள்.
தமிழில் : தோழர் விஜயசங்கர், முன்னாள் ஆசிரியர். FRONT LINE
ஆனால் இதற்கெல்லாம் அந்த ஜந்து ரோஷப்பட்டுக் கொண்டு
ஒரு முழம் கயிற்றையோ, தண்டவாளத்தையோ, பாலிடாயிலையோ தேடாது.
சங்கிகளுக்கு
ஒரு விஷயத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும்.
இந்திய
விடுதலை என்பது நீண்ட நெடிய போர். இதிலே காங்கிரஸிற்கும் பங்கு உண்டு, கம்யூனிஸ்டுகளுக்கும்
பங்கு உண்டு. முஸ்லீம் லீக்கிற்கும் பங்கு உண்டு. ஆர்.எஸ்.எஸ் மட்டுமே துரோகப் பாத்திரத்தை
வகுத்தது. இந்திய மக்கள் ஜாதி, மதம் மறந்து
போராடியதன் வெற்றிக்கனிதான் இந்திய சுதந்திரம்.
இங்கே
காந்தியும் கதாநாயகர், சுபாஷ் சந்திர போஸும் கதாநாயகர், பகத்சிங்கும் ஜவஹர்லால் நேருவும்
இன்னும் பல தலைவர்களும் நாயகர்கள். ஒரே ஒரு வில்லன் கம் காமெடியன் உங்கள் குரு கோழை
செல்ஃபி சாவர்க்கர்தான்.
No comments:
Post a Comment