Thursday, January 18, 2024

சங்கிகளிடம் யாருமே இல்லாததால் . . .

 


ஆட்டுதாடி ரெவி, திருவள்ளுவரையும் சனாதனத்தின் உச்சம் என்று சொந்தம் கொண்டாடியது. இதே ஜந்து கொஞ்ச நாட்களுக்கு முன்பு வள்ளலாருக்கும் சனாதன முத்திரை குத்தியது.

இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

மதவெறி சங்கி, சனாதனவாதிகளிடம் அவர்களுக்கென்று சொல்ல எந்த ஒரு ஆளுமையும் கிடையாது.

சுதந்திரப் போராட்டத்திற்கும் காவிச்சனியன்களுக்கும்  எந்த தொடர்பும் கிடையாது. இருப்பதெல்லாம் மன்னிப்பு கடித புகழ் செல்ஃபி கோழை சாவர்க்கர்தான். அதனால்தான் "நான் ஏன் நாத்திகன் ஆனேன்?" என்று எழுதிய, தூக்கு மேடைக்கு போகும் தருவாயில் "லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்' நூலை படித்துக் கொண்டிருந்த பகத்சிங்கை அவர்கள் ஆளாக சித்தரிக்க முயன்றார்கள்.

காந்தி, நேரு போன்ற மிகச்சிறந்த தலைவர்கள் கிடையாது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்த படேலுக்கு "ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டி" கட்டியது.

"நான் இந்துவாக பிறந்திருக்கலாம், ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன்" என்று வெளிப்படையாகக் கூறி சனாதனத்துக்கு எதிரான கருத்துக்களை தனது பிரகடனமாக அறிவித்து புத்த மதத்திற்கு தழுவிய அண்ணல் அம்பேத்கரையும் தங்கள் ஆளாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

அந்த வரிசையில்தான் வள்ளலாருக்கும் திருவள்ளுவருக்கும் காவிச்சாயம் பூச முயற்சிக்கின்றனர்.

ஒரு வேளை ஆதாயம் கிடைக்கும் என்றால் நாளை தந்தை பெரியாரைக் கூட புகழ்ந்து தொழத் தொடங்கி விடுவார்கள்.

ஏனென்றால் அரசியலுக்காக பிணத்தைக் கூட தின்னும் கேடு கெட்ட ஜந்துக்கள் சங்கிகள்.

அப்படித்தானே சங்கி ஆட்டுத்தாடி ரெவி!!!

No comments:

Post a Comment