Tuesday, January 2, 2024

சோறே கிடைக்காது எல்.முருகன்

 


நேற்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் "தோற்றுப்போனாலும்" அமைச்சரான எல்.முருகன் உதிர்த்த முத்துக்களை எல்லாம் கேட்கும் துரதிர்ஷ்டம் கிடைத்தது.

அவர் சுட்ட வடைகள்

ஒன்பது ஆண்டுகளில் இதுவரை டிமோ 11 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் கொடுத்துள்ளாராம்.

ஒரு ஆண்டில் மட்டும் 16 மருத்துவக் கல்லூரிகளை கொடுத்துள்ளாராம்.

இந்த ஒரு பயணத்தில் மட்டும் கொடுத்தது 10,000 கோடி ரூபாயாம்.

இந்த ஆண்டு தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு கொடுத்துள்ளது 6,000 கோடி ரூபாய்.

ஒரு மருத்துவமனை ஒத்தை செங்கல்லோடு நிக்குது. புயல், வெள்ளத்துக்கு கிள்ளிக் கூட பணம் தர முடியாதுன்னு அந்த திமிர் பிடிச்ச நிர்மலா அம்மையார் சொல்றாங்க. பாதிக்கப்பட்ட பகுதிக்கு போகக் கூட டிமோவுக்கு துப்பில்லை. யாருமே பேசாத, பேச விரும்பாத சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய தொகையில் நூற்றில் ஒரு பங்கு கூட தமிழிற்கு ஒதுக்க மனசில்லை. திருச்சி விமான நிலையத்தையே நாளைக்கு அதானி காலில் போட்டுடப் போறாரு. சொன்ன தொகைக்கெல்லாம் எல்.முருகனால் பட்டியல் போட முடியுமா?

நாகேஷோட "பேரு வச்சியே நாயே, சோறு வச்சியா" என்ற பழைய டயலாக்தான் இவரு அறிவிக்கிற திட்டங்களுக்கு பொருந்தும்.

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காதுன்னு சொல்வாங்க,

அது உண்மையென்றால் இனிமே எல்.முருகனுக்கு சோறு மட்டுமல்ல, டீ, காபி கூட கிடைக்கக் கூடாது. 

1 comment:

  1. கோயிலுக்கு மாலை போட்டுட்டு இப்படியெல்லாம் பொய்யா பேசக்கூடாது.

    அதுசரி, மாலை போட்டுட்டா தொழிலை மாத்திக் கொள்ளணுமா என்ன?

    ReplyDelete