கீழே உள்ளது போன வருடத்தில் வாசித்த புத்தகங்களின் விபரங்கள். முந்தைய ஆண்டுகளை ஒப்பிடும் போது சென்ற ஆண்டு படித்தது குறைவுதான். என் புத்தக வாசிப்பு பெரும்பாலும் பயணத்தில்தான். இந்த வருடம் பயணங்களுக்கு குறைவில்லை. ஆனாலும் என்னமோ தெரியவில்லை. காரில் ஏறியவுடனேயே கண்ணை சொக்கிக் கொண்டு வந்து விடுகிறது. 18,000 பக்கம், 16,000 பக்கம் என்றெல்லாம் படித்த பொற்காலம் எப்போது திரும்புமோ?
கடந்த வருடம் வாங்கிய நூல்களே இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறது. இதிலே சென்னை புத்தக விழா வேறு சபலப்படுத்துகிறது. என் செய்வேன்!
வாசிப்பதைத்
தவிர இன்னொரு முன்னுரிமைப் பணியை இந்த வருடமாவது செய்து முடிக்க வேண்டும். எல்.ஐ.சி
நிறுவனத்தில் 1974 ல் கொண்டு வரப்பட்ட லாக் அவுட்டும் அதற்கு எதிரான காலவரையற்ற வேலை
நிறுத்தமும் ஒரு வீர காவியம். அதை நாவலாக அளிக்க வேண்டும் என்ற சிந்தனை ரொம்ப நாளாகவே
மண்டையில் ஓடிக் கொண்டிருக்கிறது. பல தரவுகள் தயார். தார்வார்டிலும் பாட்னாவிலும் உள்ள
மூத்த தோழர்களோடு ஒரு நீண்ட உரையாடல் தேவைப்படுகிறது. அது இந்த வருடமாவது நிகழ வேண்டும்.
எண் |
நூல் |
ஆசிரியர் |
பக்கம் |
1 |
ஊமைகளின் தலைவன் |
முகில் |
32 |
2 |
விடுபட்டவர்கள் |
இனியன் ராமமூர்த்தி |
78 |
3 |
சைத்ய பூமி |
புதிய மாதவி |
166 |
4 |
கயிறு |
விஷ்ணுபுரம் சரவணன் |
16 |
5 |
நகுலன் வீட்டில் யாருமில்லை |
எஸ்.ராமகிருஷ்ணன் |
144 |
6 |
பாதி நீதியும் நீதி (பா)தியும் |
கே.சந்துரு |
225 |
7 |
அஷோரா |
சயந்தன் |
256 |
8 |
நாத்திக குரு |
இரா.முருகவேள் |
232 |
9 |
அது ஒரு நிலாக்காலம் |
ஸ்டெல்லா புருஸ் |
204 |
10 |
மலை மாளிகை |
சுஜாதா |
48 |
11 |
மார்க்சியம் |
ச.லெனின் |
120 |
12 |
வி.பி.சிந்தன் |
என்.ராமகிருஷ்ணன் |
32 |
13 |
மெரினா |
சுஜாதா |
94 |
14 |
வேட்டை |
லட்சுமி சரவணகுமார் |
309 |
15 |
முகாம் |
அ.கரீம் |
263 |
16 |
நாதுராம் கோட்சே |
திரேந்திர கே.ஜா தமிழில் : இ.பா.சிந்தன் |
400 |
17 |
அப்போதும் கடல் பார்த்துக் கொண்டுதான் இருந்தது |
எஸ்.ராமகிருஷ்ணன் |
174 |
18 |
உண்மைகள், பொய்கள், கற்பனைகள் |
ஹரிசங்கர் |
160 |
19 |
அன்று சிந்திய ரத்தம் |
சாத்திரி |
144 |
20 |
அம்மா ஒரு கொலை செய்தாள் |
அம்பை |
277 |
21 |
இச்சா |
ஷோபா சக்தி |
303 |
22 |
நீதிமன்றமும் நானும் |
சிகரம் செந்தில்நாதன் |
111 |
23 |
மாக்காளை |
டி.கே.கலாபிரியா |
294 |
24 |
நான் ஒரு ரசிகன் |
எம.எஸ்.விஸ்வநாதன் |
168 |
25 |
பொய்கைக்கரைப்பட்டி |
எஸ் . அர்ஷியா |
196 |
26 |
க்ளிக் |
மாதவராஜ் |
248 |
27 |
அநீதிக்கதைகள் |
அருண்.மொ |
132 |
28 |
சென்னைக்கு மிக அருகில் |
வினாயக முருகன் |
367 |
29 |
தட்டப்பாறை |
முஹம்மது யூசுஃப் |
530 |
30 |
ககந்தக பூமியில் கண்ணீர் |
பி.என் .தேவா |
24 |
31 |
கொல பசி |
அ.முத்துக்கிருஷ்ணன் |
166 |
32 |
போராட்டங்களின் கதை |
அ.முத்துக்கிருஷ்ணன் |
267 |
33 |
ஜமீன் கதைகள் |
கே.என்.சிவராமன் |
720 |
34 |
மதராஸ் - மண்ணும் மக்களும் |
வினாயக முருகன் |
180 |
35 |
இசையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும் |
களப்பிரன் |
44 |
36 |
மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் |
ஆதவன் தீட்சண்யா |
54 |
37 |
பக்கார்டி |
ஹரிசங்கர் |
127 |
38 |
ஒற்றைச் சிறகு ஓவியா |
விஷ்ணுபுரம் சரவணன் |
120 |
39 |
காட்ஃபாதர் |
யுவகிருஷ்ணா |
368 |
40 |
ரைட்டர்ஸ் உலா |
யுவகிருஷ்ணா |
192 |
|
|
மொத்தம் |
7985 |
No comments:
Post a Comment