சமையல் பதிவு போட்டு நீண்ட நாட்களாகி விட்டதாலும் புத்தாண்டின் முதல் பதிவை இனிப்பாக துவக்கலாம் என்பதாலும் முந்திரி கேக் செய்ய முயற்சி செய்தேன்.
யூட்யூபில் நான்கைந்து செய்முறைகளைப் பார்த்து சுலபமான ஒரு முறையே தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் என்ன செய்ய! ஒரு நிமிடம் கூட ஆனதால் கேக் வராமல் அது உருண்டையாகி விட்டது.
கவுண்ட மணி சொல்வது போல "கோழி குருடா இருந்தால் என்ன? குழம்பு ருசியா இருப்பதுதான் முக்கியம்" என்று மனதை தேற்றிக் கொண்டேன். ருசி நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனாலும் இந்த விக்கிரமாதித்தன் ஓய மாட்டான். அடுத்த முயற்சியில் வெல்வேன் என்ற நம்பிக்கையோடு சொல்கிறேன்.
HAPPY NEW YEAR
No comments:
Post a Comment