Saturday, January 21, 2023

வாங்கியாச்சு, சரி, படிக்கனும்

 


இந்த வருட சென்னை புத்தக விழாவுக்கு நேற்று மதியம் அரை நாள் விடுப்பெடுத்துக் கொண்டு சென்று வந்தேன்.

பண்டைத் தமிழ் இலக்கியங்களைக் கொண்ட புகைப்படம் எடுக்கும் மையம் உங்களை வரவேற்கும்.




இந்த வருடமும் வாங்க வேண்டிய புத்தகங்களை ஒரு எக்ஸெல் ஷீட் போட்டு அரங்கு எண் வரிசைப்படி தயார்படுத்திக் கொண்டுதான் சென்றேன். என் பட்டியலில் இருந்தது 25 நூல்கள். அவற்றில் எட்டு நூல்கள் கிடைக்கவில்லை. பட்டியலில் இல்லாமல் பார்த்து எடுத்தது வேறு 14 நூல்கள். ஆக மொத்தம் இந்த முறை 31 நூல்கள்.

வழக்கத்தை விட இந்த வருடம் குறைவுதான். ஏற்கனவே வாங்கி படிக்க வேண்டிய நூல்கள் பத்து என்பதால் அடக்கி வாசித்தேன் என்பதுதான் உண்மை.

உள்ளே நுழையும் போது "சிலை" அரங்கம் இருந்தது. தந்தை பெரியாரோடும் அண்ணல் அம்பேத்கரோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். சிறிய திருவள்ளுவர் சிலை ஒன்றை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலும் திரும்புகையில் வேறு பாதை வழியே சென்றதால் அது இயலவில்லை. ஆன்லைனில் வாங்கலாம் என்று யோசிக்கிறேன்.





எந்த பிரபல எழுத்தாளரையாவது பார்த்தாயா? புகைப்படம் எடுத்துக் கொண்டாயா என்றொரு கேள்வி வழக்கமாக வரும். அதற்கு பதில் சொல்ல மனதில்  ஒரு மீம் வைத்திருந்தேன். உயிர்மையில் மனுஷ்ய புத்திரனும் ஜீரோ டிகிரியில் சாரு நிவேதிதாவும் இருந்தார்கள். அங்கே அவர்களின் நூல்களை வாங்கவில்லை. ஜீரோ டிகிரியில் நான் வாங்கிய புத்தகத்தை கையில் எடுத்து பார்த்து விட்டு என்னையும் பார்த்தார் சாரு நிவேதிதா. நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சந்தியா பதிப்பகத்தில் திரு வண்ணதாசன் அவர்களை பார்த்ததும் நான் விரும்பி புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.




டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி ஊறுகாய் என்றெல்லாம் பலர் பேசுகிறார்கள். நம் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. வெளியில் வந்ததும் பிர்பலமாக பேசப்படும் ஞானாம்பிகை கேட்டரிங்கில் காபி மட்டும் குடித்தேன். ஓகே ரகம்தான். ஓஹோவென்றெல்லாம் இல்லை.

இந்த வருடம் வாங்கிய நூல்களின் பட்டியல் கீழே. இன்றும் நாளையும் புத்தக விழா செல்ல இருப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்ப்தால் அரங்கத்தின் எண்ணையும் அளித்துள்ளேன்.

 வாங்கியாச்சு. படிக்கனும். அதுதான் முக்கியம். படிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கைதானே வாழ்க்கை.




No comments:

Post a Comment