Wednesday, January 18, 2023

அப்படித்தான் சொன்னாய் ஆட்டுத்தாடி

 


அடி பலமாக விழுந்ததால் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று பல்டி அடித்துள்ளார் ஆட்டுத்தாடி.

 


அந்த காலத்தில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லை என்பதால் தமிழகம் என்று சொன்னதாக சமாளிக்கப்பார்க்கிறது ஆட்டுத்தாடி. ஸ்டேட் விட்டு ஸ்டேட் சங்கி அரசியல் செய்ய வந்த  உனக்கு தெரியலைன்னா தமிழ்நாடு அப்போது இல்லையென்று அர்த்தமா? “செந்தமிழ்நாடெனும் போதிலே  இன்பத்தேன் வந்து பாயுது காதுக்குள்ளே”  என்று பாரதி பாடியது தெரியாதா ஆட்டுத்தாடி? 

 அது சரி, அப்போது தமிழகம் என்று பெயர் இருந்ததற்கு என்ன ஆதாரம்? எந்த வரலாற்று, பண்பாட்டு அடிப்படையில் தமிழகம் என்று பேசினாய்? அதை கொஞ்சம் சொல்லேன்.  பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரையும் தமிழ்நாட்டின் அரசுச்சின்னத்தில் தமிழ்நாடு என்றிருப்பதால் அச்சின்னத்தையே தவிர்த்ததும் ஏன்?

 தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது, தமிழகம் என்றழைக்க வேண்டும் என்று பேசி விட்டு இப்போது விளக்கெண்ணெய்தனமாக அறிக்கை கொடுத்துள்ளது சங்கிகளின் சாவர்க்கரிசம். முதலில் பேசியது திமிர். இப்போதைய அறிக்கை அசிங்கம்.

 தான் சொன்னதில் உறுதியாக இல்லாமல் பல்டி அடித்தது கூட தவறில்லை. ஆனால் அப்படி சொல்லவேயில்லை என்று சாதிப்பது எல்லாம் சங்கிகளின் நேர்மையற்ற குணாம்சத்திற்கு சான்று. அவ்வளவுதான்.

 பாவம் ஆட்டுத்தாடியை நம்பி அலப்பறை செய்து கொண்டிருந்த “மத்யமர் ஆட்டுக்காரன்” குழு சங்கிகள்தான் தங்கள் வீட்டில் எழவு விழுந்தது போல சோகமாக இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment