Wednesday, January 25, 2023

செம சண்டைப்பா!

 


மோடியின் குரங்குக் குட்டி சட்ட அமைச்சர் கிரண் ரஜ்ஜுவிற்கும் உச்ச நீதிமன்றத்துக்குமான சண்டை களை கட்டியுள்ளது.

கொலோஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளில் மூவரை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.

ஒன்றிய அரசு சொன்ன காரணங்கள் என்ன?

ஒருவர் தன் பால் ஈர்ப்பாளர்.

அதை காரணமாக ஏற்க முடியாது.. 

தன் பால் ஈர்ப்பாளர் என்பதை பதவிக்கான அளவுகோலாக வைத்தால் பாஜகவிலேயே எத்தனை விக்கெட் விழும்?

சமூக வலைத்தளங்களில் ஒன்றிய அரசை விமர்சித்து மற்ற இருவர் பதிவு போடுகின்றனர்.

அவர்களின் கருத்துரிமையை நிராகரிப்பிற்கான காரணமாக சொல்வதை ஏற்க முடியாது.

அதானே பாஜகவுக்கு ஆதரவாக பதிவு போடும் மகளிர் அணிச்செயலாளர் விக்டோரியா கௌரி நீதிபதியாகும் போது விமர்சிப்பவர்கள் ஆகக் கூடாதா?

உளவுத்துறை அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் பொது வெளியில் வெளியிடுவது ஆபத்தான போக்கு, அறிக்கை அளிப்பவர்களுக்கு அச்சத்தை உருவாக்கும்.

ஆமாம். அறிக்கை பொது வெளிக்கு வருமென்றால் ஆட்சியாளர்கள் விருப்பப்படி கதை கட்டி எழுத முடியாதல்லவா?

பிகு 1: நீல நிறத்தில் இருப்பது அரசு சொன்னது.

சிவப்பு நிறத்தில் உள்ளது உச்ச நீதிமன்றம் சொன்னது. 

மற்றவை என்னுடைய கருத்து.

பிகு 2 : இவர்கள் சண்டை எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. ஆனால் பாதிப்பு என்னமோ வழக்காடிகளுக்குத்தான்

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. கள்ளச்சாராயம் குடிக்கற பிச்சைக்காரனுக்கு கட்டிங் அடிக்க காசு தரலாம்னா . ....... தங்கத்தில் திருவோடு செஞ்சு பிச்சை எடுக்கப் போறியா? நீ ஆயிரம் பில்ட் ப் கொடுத்தாலும் பிச்சைக்காரன் என்பதை மாற்ற முடியாது.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete