இந்திய மக்களாகிய நாங்கள்
இந்தியாவை, இறையாண்மையுடைய, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக நிர்ணயிக்க உளமாற உறுதியேற்று
அனைவருக்கும்
சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்
சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும்
அனைவருக்கும் சம வாய்ப்பினையும்
சகோதரத்துவத்தையும்
கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்அளித்து
இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும் பாதுகாப்போம் என்று சொல்கிற அரசியல் சாசனத்தை இந்தியா அமலாக்கிய நாள்தான் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது
என்பதை நினைவு படுத்த வேண்டிய நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் நம்மை வைத்துள்ளார்கள்.
அரசியல் சாசனம் சொல்லும் எந்த கோட்பாட்டையும் விழுமியங்களையும் மதிக்காத, அவற்றுக்கு கொஞ்சமும் பொருத்தமும் இல்லாத, அவற்றை அழிக்கிற, சிதைக்கிற காட்டாட்சியை அகற்றி, உண்மையான குடியரசு தினத்தை கண்டிப்பாக கொண்டாடுவோம் என்று உறுதியேற்கிற நாளாக
இந்த ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடுவோம்.
ஓராண்டில் நிலைமை
இன்னும் மோசமாகத்தான் மாறியுள்ளது. சுயேட்சையான அரசியல் சாசன அமைப்புக்களின் சுதந்திரம்
பறி போயுள்ளது.
ஒரே நாளில் பல மாநிலங்களில்
தேர்தல் நடந்தாலும் குஜராத் தேதி மட்டும் மோடி சீன் போட்டு முடிந்த பின்னே அறிவிக்கப்பட்டது.
இதுதான் த்ர்தல் ஆணையத்தின் லட்சணம். சி.பி.ஐ ஒன்றிய அரசின் ஏவல் நாயாகத்தான் செயல்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தோடு கடும் சண்டை. தலைமை நீதிபதி மாறினால் காட்சிகள் மாறி விடும்.
எனவே இந்த ஆட்சி தொடரும்வரை
ஜனநாயகம் என்பது வெறும் காகிதச் சர்க்கரைதான். . .
No comments:
Post a Comment