தன்னுடைய பெயரையோ, புகைப்படத்தையோ, குரலையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் தடை விதித்துள்ளதாக முதலில் ஒரு செய்தி வந்தது. வணிக நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தக்கூடாது என்று இன்னொரு செய்தி விளக்கமாக சொன்னது.
இரண்டாவது செய்திதான்
சரியானது என்றால் . . .
புதிய திரைப்படங்கள்
வெளியாகும் போதெல்லாம் பரபரப்பை உருவாக்குபவர் ரஜினிகாந்த் என்று தாராளமாக சொல்லலாம்
அரசியலுக்கு வருவேன்
என்று சொல்லி பல வருடங்களாக தன் ரசிகர்களை ஏமாற்றி வந்தவர் ரஜினிகாந்த் என்று நீங்கள்
நன்றாகவே விமர்சிக்கலாம்.
ஆணாதிக்க கருத்துக்களை
தன் திரைப்படங்களில் வெளிப்படுத்துபவர் என்று கடுமையாகவே திட்டலாம்.
கொலுகைன்னாலே தலை
சுற்றக்கூடியவர் ரஜினிகாந்த் என்று நையாண்டி செய்யலாம்.
தன் குடும்பத்தினர்
நடத்தும் பள்ளிகளுக்கு வாடகை கட்டாததையோ அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம்
கொடுக்காததையோ கண்டு கொள்ளாத கஞ்சப்பிசினாறி என்றும் அழைக்கலாம்.
பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
ரஜினி மீண்டும் மாட்டாமலா
போகப் போகிறார்! அப்போது பார்த்துக் கொள்வோம், மிச்சத்தை . . . அதற்குள்ளாக மேலே உள்ள
படத்தில் இருப்பது போல செய்யாமல் இருக்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் தான் நடித்த திரைப்படங்களை யாரும் பார்க்கவேண்டாம் என சொன்னாலும் சொல்லுவார்.
ReplyDelete