காட்டிக் கொடுத்ததும்
மன்னிப்பு கேட்டதுமே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் பங்காக வரலாற்றில்
பதிவாகியுள்ளதால் சுதந்திரப் போராட்ட நாயகர்களை தங்களவர்களாக காண்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்
சங்கிகள். “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்று நூலெழுதிய, ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுப் படை என்று
தனது இயக்கத்திற்கு பெயர் சூட்டிய பகத்சிங்கை கைப்பற்ற முன்பு முயன்று தோற்றுப் போனார்கள்.
இப்போது அடுத்த கட்டமாக
சுபாஷ் சந்திர போஸை தங்களவராக காண்பித்துக் கொள்ளும் முயற்சி நடக்கிறது. தீவுகளுக்கு
பெயர் வைக்கும் மோடி அரசியல் பற்றி தனியாக எழுத வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் ஸின்
இலக்கும் நேதாஜியும் இலக்கும் ஒன்று என்று சொல்லி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக்
மோகன் பகவத் ஒரு பிட்டை போட்டு வைத்தார்.
உங்க அமைப்புக்கும்
எங்க அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சும்மா கதையளக்காதே என்று நேதாஜி சுபாஷ்
சந்திர போஸின் மகள் அனிதா போஸ் பகவத்தின் மூக்கை
உடைத்து விட்டார்.
தாவணிக் கனவுகள் படத்தில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு பூசாரியிடம் உனக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தெரியுமா
என்று கேட்டு அதட்ட அவரோ போஸ் பக்கத்து தெருவில பெட்டிக் கடை வச்சிருக்காரு, மத்தவங்களைப்
பத்தி தெரியாது என்பார். அந்த பூசாரியிடம் கேட்டிருந்தால் அவர் கூட உங்களுக்கும் நேதாஜிக்கும்
சம்பந்தம் இல்லையென்று சொல்லியிருப்பாரே பகவத்! எதுக்கு இப்படி அசிங்கப்படனும்!
No comments:
Post a Comment