Sunday, January 1, 2023

என் போன வருடத்துப் பட்டியல்

 





 

2023 ம் ஆண்டில் பலர் பல தீர்மானங்கள் எடுத்துக் கொள்வார்கள். பலர் முந்தைய ஆண்டு படித்த நூல்களின் பட்டியலை வெளியிடுவார்கள்.    இதனை துவக்கி வைத்தது எழுத்தாளரும் எங்கள் மதுரைக் கோட்ட தோழருமான ச.சுப்பாராவ் என்பது ஒரு பெருமை.

 

இந்த ஜோதியில் ஐக்கியமாக நானும் கடந்த 2022 ம் ஆண்டு படித்த நூல்களின் பட்டியலை வெளியிடுகிறேன்.  கடந்த வருடம் சென்னை புத்தக விழாவில் வாங்கி வந்த புத்தகங்களுக்காக பட்டியலை எடுத்து அதற்குப் பின் வாங்கிய நூல்களையும் பட்டியலில் இணைத்து படித்த நூல்களை மட்டும் எடுத்து தனியாக ஒரு பட்டியல் எடுத்த போது (இந்த எக்ஸெல், காபி, பேஸ்ட் எல்லாம் எவ்வளவு வசதி !) இரண்டு உண்மைகள் தெரிந்தது.

 

2021 ம் ஆண்டை விட 2022 ம் ஆண்டு கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் அதிகமாக படித்துள்ளேன். 2016 ம் ஆண்டு படித்த 116 நூல்கள், 18,845 பக்கங்களை இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ கூட எட்டுவது மிகக் கடினம். பணியோ ஓய்வுக்குப் பிறகு வேண்டுமானால் முயற்சிக்கலாம்.

 

வாங்கியும் படிக்காத நூல்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட பத்து. அதிலே முக்கியமானதாக தோழர் விஜயசங்கரின் “ஆர்.எஸ்.எஸ் – இந்தியாவிற்கு ஒரு அச்சுறுத்தலும், தோழர் முகமது யூசுபின் தட்டப்பாறையும் அரம்பையும்        உள்ளது. இதற்கிடையில் மனுசன் அடுத்த நூலை வேறு வெளியிடப் போகிறார்.

 நானும் அடுத்த நூலை தொடங்க வேண்டிய தருணம் வந்து விட்டதென்று கருதுகிறேன். இன்னும் சில தரவுகளை சேகரித்து விட்டால் பணியை துவக்கி விடலாம். பார்ப்போம் 2023 ல் அது கைகூடுகிறதா என்று!

 இதோ என் பட்டியல்

 

 

 

            

எண்

பெயர்

ஆசிரியர்

பக்கம்

1

இவனுக்கு அப்போது மனு என்று பெயர்

இரா.எட்வின்

104

2

ஹயவதனன்

கிரீஷ் கர்னாட் தமிழில் கே.நல்லதம்பி

110

3

தந்தை பெரியாரின் தடை செய்யப்பட்ட தலையங்கம்

.திருமாவேலன்

92

4

ஊரார் வரைந்த ஓவியம்

துரை குணா

36

5

பச்சைத்துரோகம்

ஆழி செந்தில்நாதன்

32

6

சூடு சொரணை சுயமரியாதை

பாமரன்

144

7

பெருங்காமநல்லூர் படுகொலைகள்

பிரவிண்குமார்

38

8

தெய்வங்களும் சமூக மரபுகளும்

தொ.பரமசிவன்

102

9

அறியப்படாத தமிழகம்

தொ.பரமசிவன்

132

10

பஞ்சத்துக்கு புலி

ஷோபா சக்தி

 

11

சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை

அம்பை

167

12

வஞ்ச பாண்டவர்கள்

புலியூர் முருகேசன்

325

13

தடை செய்யப்பட்ட கதைகள்

இஷான் ஷெரிப்

176

14

குரலற்றவர்கள்

ஹரிஷ் குணசேகரன்

123

15

சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்

மதுரை நம்பி

311

16

சொக்கட்டான் தேசம்

ராஜ் சங்கீதன்

151

17

முத்துக்கள் பத்து -ஆதவன்

ஆதவன்

144

18

முத்துக்கள் பத்து -சோலை சுந்தரப் பெருமாள்

சோலை சுந்தரப் பெருமாள்

208

19

சிறகொடிந்த வலசை

புதிய மாதவி

144

20

செபாஸ்டியன் குடும்பக்கலை

டி.எம்.கிருஷ்ணா

324

21

வாசிப்பு

.சுப்பாராவ்

104

22

நீலத் தங்கம்

இரா.முருகவேள்

78

23

தெய்வமே சாட்சி

.தமிழ்செல்வன்

160

24

பொய் மனிதனின் கதை

மாதவராஜ்

136

25

பெண்களின் ஆடை வரலாறும் அரசியலும்

சிந்துஜா

112

26

அருவ ஜீவிகள்

.பாக்கியம்

128

27

சிங்காரவேலரும் பாரதிதாசனும்

பா.வீரமணி

160

28

நான் அவள் கேப்புசினோ

ஹரிஷ் குணசேகரன்

144

29

மதில்கள்

வைக்கம் முகமது பஷீர்

71

30

சென்னைக்கு மிக அருகில்

வினாயக முருகன்

366

31

வரலாறு சாவர்க்கரை மன்னிக்காது

விஜயசங்கர்

79

32

எப்ப்வுமே ராஜா

டாக்டர் ஜி.ராமானுஜம்

86

33

வண்ணத்துப்பூச்சி வேட்டை

சுஜாதா

160

34

தூங்கா நகர்

.முத்துகிருஷ்ணன்

270

35

சாப்பாட்டுப் புராணம்

சமஸ்

112

36

இயையும் தமிழும் இசைத்தமிழ் தாத்தாவும்

களப்பிரன்

44

37

மார்க்ஸ் - சில தெறிப்புகள்

இரா.ரமணன்

40

38

அன்பென்பது ஒரு தந்திரம் அல்ல

.மாடசாமி

72

39

என்.நன்மாறன் நினைவுகளின் சித்திரம்

தொகுப்பு -ஸ்ரீரசா

80

40

வெள்ளாடுகளும் சில கொடியாடுகளும்

சோலை சுந்தரப் பெருமாள்

128

41

மௌனம் கலைத்த சாட்சியங்கள்

தொகுப்பு : .பா.சிந்தன்

144

42

உக்ரைனில் என்ன நடக்கிறது?

.பா.சிந்தன்

110

43

மகாத்மா மண்ணில் மத வெறி

ஜி.ராமகிருஷ்ணன்

136

44

நரக மாளிகை

சுதீஷ் மின்னி - தமிழில் கே.சதாசிவன்

151

45

பச்சைத்துரோகம்

ஆழி செந்தில்நாதன்

32

46

சங் பரிவாரத்தின் பொய்யும் புரட்டும்

ஆர். எஸ்.செண்பகம்

48

47

வேலூர் புரட்சி

.சஞ்சீவி

98

48

தமிழ் நெடுஞ்சாலை

ஆர்.பாலகிருஷ்ணன்

336

49

இரண்டாம் ஆட்டம்

லட்சுமி சரவணகுமார்

432

50

கதைகளின் கதை

சு.வெங்கடேசன்

128

51

அவலங்கள்

சாத்திரி

198

52

ஆன்மீக அரசியல்

.பா.சிந்தன்

312

53

டைகரீஸ்

.பால முருகன்

464

54

நகர் துஞ்சும் நள யாமத்தில் செங்கோட்டு யானை வாசித்த VIII தஸ்தாவேஜூகள்

பாவெல் சக்தி

376

 

 

 

8358

   

No comments:

Post a Comment