Friday, January 13, 2023

3 வருடம் 5 கோடி 83 லட்சம்

 


அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாடு, இம்மாதம் எட்டாம் தேதி முதல் பதினொன்றாம் தேதி வரை கொல்கத்தாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாநாடு குறித்து, மாநாட்டை நடத்த சங்கம் சந்தித்த சவால்கள், அனுபவங்கள்  குறித்தெல்லாம் விரிவாக எழுதுவேன்.

முதற்கட்டமாக ஒரு முக்கியமான தகவலை மட்டும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

முந்தைய மாநாடு விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற 2020 வருடம் முதல் 2022 வரை மூன்றாண்டுகளில் எங்கள் சங்கத் தோழர்கள் அளித்த மிக மிக முக்கியமான நிதியுதவிகளின் விபரத்தை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அஸ்ஸாம் வெள்ள நிவாரண உதவிக்காக                      -   39,88,417.00
கோவிட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
நேரடி உதவி மட்டும் முதல்வர் நிவாரண நிதிக்கு    5,14,49,515.00
டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு                        24,92,173.00
ஜாஹீன்பாத் போராட்டத்தில் சங்கிகள்
நடத்திய கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு
(வடக்கு மண்டலத் தோழர்கள் மட்டும் அளித்தது)          3,78,000.00

மொத்தம்                                                             5,83,08,105.00

இந்த விபரம் அகில இந்திய அளவில் செய்யப்பட்ட உதவி மட்டுமே. மண்டல அளவில், கோட்ட அளவில், கிளை அளவில் செய்யப்பட்ட உதவிகளை கணக்கில் எடுத்தால் எங்கேயோ போகும். 

இந்த தேசத்தை நேசிக்கிறவர்களாக எங்களை எங்கள் சங்கம் பயிற்றுவித்துள்ளது என்பது பெருமிதம் அளிக்கக் கூடிய ஒன்றாகும். 

1 comment: