Saturday, April 2, 2022

சுமந்துவுக்கு ரெண்டு ட்வீட்

 



 

நாஞ்சில் சம்பத் தமிழிசை சௌந்தரராஜனை ஒருமையில் பேசும் காணொளியை ஆபாச சங்கி கிஷோர் கே சாமி பகிர்ந்து கொள்ள, அதை சங்கி சுமந்து ராமனும் பகிர்ந்து கொண்டு “திராவிட மாடல் பேச்சு” என்று நக்கல் கமெண்ட் வேறு போட்டிருந்தார்.

 


நாஞ்சில் சம்பத்தின் மொழி நிச்சயம் கண்டிக்கத்தக்கது. ஒரு பெண்ணை ஒருமையில் பேசுவது என்பது மோசமான செயல். யாராக இருந்தாலும் அதனை ஏற்க முடியாது.

 நாஞ்சில் சம்பத்தை கண்டிக்கும் அருகதை கிஷோர் கே சாமிக்கு உள்ளதா? எத்தனை பெண் செயல்பாட்டாளர்களை அவன் இழிவு படுத்தியுள்ளான்! எத்தனை கட்டுக்கதை கட்டியிருப்பான்! அதற்காகத்தானே அவன் கைது செய்யப்பட்டான்!

 ஒரு மோசமான பேர்வழி சொல்வதை அப்படியே பகிர்ந்து கொண்டுள்ள சுமந்துவும் எவ்வளவு மோசமான மனிதன்!

 திராவிட மாடல் என்று நக்கலடிக்கும் சுமந்து “அகதிகள் முகாம்கள் எல்லாம் குழந்தைகள் உற்பத்தித் தொழிற்சாலை” என்று ஆபாசமாக மோடி பேசியதை கண்டிப்பாரா? அல்லது அதுதான் “ஆரிய மாடல்” என்பாரா?

 


அதைத்தான் சுமந்துவின் ட்வீட்டில் கேட்டேன்.  ஆனால் பதில் சொல்லவில்லை.

 

No comments:

Post a Comment