நேற்று காஷ்மீரில் ஷோபியான் பகுதியில் இருந்த பண்டிட்
குடும்பங்கள் மீது ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. புல்லட்டுகளால்
துளைக்கப்பட்ட பாலகிஷண் என்பவர் உயிர் பிழைத்து விட்டார். மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வருகிறார்.
90 களில் தீவிரவாதிகள் தாக்கிய போதும் காஷ்மீரை விட்டு
வெளியேறாத பண்டிட்டுகள் அவர்கள்.
“முப்பது வருடங்களாக நாங்கள் அமைதியாகத்தான் வாழ்ந்து வந்தோம்.
எங்கள் அருகாமையில் உள்ள இஸ்லாமியர்கள்தான் எங்களுக்கு பாதுகாப்பு, இப்போதும்
அவர்கள்தான் உடனே வந்தார்கள். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, இப்போது எங்கள்
வீடுகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது அனைத்தும் இஸ்லாமியர்கள்தான். இப்போது தாக்குதல்
நடந்த பிறகு எதிர்காலம் குறித்து கவலை வருகிறது”
என்று சுடப்பட்ட பாலகிஷணின் தம்பி கூறியுள்ளார்.
முப்பது வருடங்களாக அமைதியாக இருந்த இடத்தில் ஏன் திடீரென்று
தாக்குதல்?
தீவிரவாதத் தாக்குதல்கள் கடந்த ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது
ஏன்?
காஷ்மீர் விடுதலை வீரர்கள் என்ற புதிய அமைப்பு ஏன் தலை
தூக்குகிறது?
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கையில் தாக்குதல்களும்
அதிகரிப்பது சுற்றுலாப் பயணிகள் மனதில் அச்சத்தை உருவாக்கவா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் சங்கிகள்தான் பதில் சொல்ல வேண்டும்.
அரைகுறை உண்மைகளோடு மத உணர்வை உசுப்பேற்றவே ஒரு திரைப்படம்
எடுத்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருவது வெறியன் மோடியும் மோடியின்
குண்டர்களும்தான்.
வாஜ்பாய் ஆண்ட ஆறு வருட காலத்திலும் இதோ டுபாக்கூரின் எட்டு
ஆண்டுகளிலும் பண்டிட்டுகள் பிரச்சினைக்காக எந்த முயற்சியும் எடுக்காத வேஸ்ட்
பீஸ்கள்தான் இவர்கள்.
அடுத்த தேர்தலில் முட்டாள் ஜனங்களை உசுப்பேற்ற இப்போது இவர்கள்
கையிலெடுத்துள்ளது காஷ்மீர் பண்டிட்டுகள் பிரச்சினை.
அந்த எழவெடுத்த திரைப்படத்திற்குப் பின்பு தாக்குதல்கள்
அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இந்த தாக்குதல்களுக்கு சங்கிகளே காரணம்.
பிகு : இப்போதைய தாக்குதல்களில் யாரும் உடலின் மேற்பகுதிகளில்
சுடப் படுவதில்லை. முட்டிக்கு கீழேதான் சுடப்படுகிறார்கள் என்றும் செய்தி
சொல்கிறது. அப்படியென்றால் ????????????
No comments:
Post a Comment