ஒரு தோழர் தகவலுக்காக அனுப்பிய ஒரு நிலைத்தகவல் கீழே உள்ளது.
கற்களை மதச் சார்பின்மையானதென்றும் புல்டோசரை மதவெறியுடையது
என்றும் சொல்கிறார்கள் என்பது இதன் பொருள்.
விஷமத்தனமான பிரச்சாரம் என்பதைத் தவிர வேறில்லை இது.
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தை சாக்காக வைத்துக் கொண்டு மசூதிகள்
முன்பாக ஆரவாரக் கூச்சலிட்டவர்கள் சங்கிகள். அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது
கல்லெறிந்தார்கள் என்று அவர்கள் கட்டியது கட்டுக்கதை என்பதற்கு அவர்கள் கைது செய்த
இந்த அப்பாவியின் புகைப்படத்தைப் பார்த்தாலே புரியும்.
கல்லெறிந்ததாக குற்றம் சுமத்தி ஒரு அப்பாவியை ஜீப்பில் கட்டி
பல கிலோ மீட்டர் ஊர்வலம் நடத்தி இழிவு செய்த கூட்டம் இது என்பதை மறக்க முடியுமா?
முதலில் கல்லெறிந்ததாக
கதை கட்டியவர்கள் பிறகு அங்கீகரிக்கப்படாத் வீடுகள் என்று அடுத்த கதையை
அவிழ்த்து விட்டார்கள். பிரதம மந்திரி
திட்டத்தின் படி கட்டப்பட வீடு கூட அங்கீகரிக்கப்படாத வீடா என்ன்? அதெப்படி
இஸ்லாமியர்கள் மட்டும்தான் ஒப்புதல் பெறாமல் வீடு கட்டினார்களா?
இஸ்லாமியர்களை அச்சுறுத்த வேண்டும், அந்த பகுதியிலிருந்தது
அவர்களை அப்புறப்படுத்த வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவர்கள்
சங்கிகள். ஏற்கனவே குஜராத்தில்,
காஷ்மீரில், முசாபர் நகரில் செய்ததுதான்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்
தோழர் பிருந்தா காரத் களம் புகுந்து புல்டோசர்
முன்பு நின்ற தருணம் வரை இடித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.
என்ன கடப்பாரை வைத்து பாபர் மசூதியை இடித்த கிரிமினல்கள் இப்போது
தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி விட்டனர்.
அதனால் நிச்சயமாக சொல்ல முடியும்.
புல்டோசர் நிச்சயமாக மத வெறியின் ஆயுதம்தான். . .
No comments:
Post a Comment