Sunday, April 17, 2022

இசையோடு நின்றால் நல்லது ராஜா

 


மூன்று நாட்களாக பயணத்தில் இருந்ததால் எழுத முடியவில்லை.

அண்ணல் அம்பேத்கரை மோடியுடன் ஒப்பிட்டு முன்னுரை எழுதியது இளையராஜாவின் மிகப் பெரிய அபத்தம்.

அண்ணல் அம்பேத்கரின் அறிவு, களச் செயல்பாடு, ஒடுக்கப்பட்டோர், தொழிலாளர் மற்றும் பெண்கள் உரிமைகள் ஆகியவற்றில் அவரின் நிழலின் கால் தூசு அளவு கூட நெருங்க முடியாத ஒரு அற்பனை அவரோடு ஒப்பிட்டால் "இசை ஞானி"யாகவே இருந்தாலும் எதிர்ப்போம். 

மோடியை மட்டும் புகழ்ந்தால் கூட சிரித்து விட்டு கடந்திருக்கலாம். ஆனால் இந்த பொருத்தமற்ற ஒப்பீடு எரிச்சலைத்தான் தருகிறது. நீங்கள் என்னத்தான் முயன்றாலும் உங்களை அந்த கூட்டம் பயன்படுத்திக் கொள்ளுமே தவிர, தங்களில் ஒருவராக என்றுமே ஏற்றுக் கொள்ளாது.(திருவையாற்றில் கண்ட ஒரு காட்சியை நாளை எழுதுகிறேன்)

உங்களின் அபத்தமான ஒப்பீட்டைக் கண்டிக்கிறேன். 75 வயதான நீங்கள் உங்கள் சுய நினைவில் இல்லாமல் அந்த முன்னுரையை எழுதியிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களுக்கு நன்கு வரும் இசையோடு உங்கள் செயல்பாட்டை நிறுத்திக் கொண்டால் நல்லது. 

முன்னொரு முறை ஒரு பத்திரிக்கையாளரைப் பார்த்து "உனக்கு அறிவு இருக்கா?" என்று நீங்கள் கேட்ட கேள்வியை உங்களைப் பார்த்து உங்கள் ரசிகர்கள் கேட்கும்படியான சூழலை உருவாக்காதீர்கள்.

உங்கள் மீது எரிச்சல் இருந்தும் கூட நேற்று இரவு முழுதும் உங்கள் இசையோடுதான் என் பயணம் நிகழ்ந்தது.

அதனால்தான் சொல்கிறேன்.

"இசையோடு நின்றால் நல்லது"

6 comments:

  1. இளயராஜா மற்றும் அவர் தம்பி எல்லாம் சமுதாயத்தால் பயனடைந்து ,மக்களை மிதிக்கும் சனாதன பாதை வழி செல்பவர்கள்...சஙகி கால் எங்கே என்று அலைபவர்கள்...
    . விபிசனர் இன்றும் உண்டு ...
    காந்தியோடவது ஒப்பிட்டு போயிருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. இளையராஜாவின் இன்றைய அகவை 78.

      Delete
    2. So what? That does not make any difference

      Delete
  2. Every body has got the right to voice their personal opinion. Don't expect him to toe your lines.
    do not dictate your terms to Ilayaraja. If you dont like the comments of ilayaraja just leave it.
    you cannot tell a great musician just to stick with music. In a democratic setup when a nobody like Su venkatesan is airing his opinions why cant the great ilayaraja?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கய்யா. இளையராஜாவுக்கு தன் கருத்தை சொல்ல எல்லா உரிமையும் இருக்கத்தான் இருக்கு. மோடியை அண்ணல் அம்பேத்கரோடு அபத்தமா ஒப்பிட்டதால்தான் இப்போ சர்ச்சை. இதுவே மோடியை ஜயேந்திர சரஸ்வதியோட ஒப்பிட்டிருந்தா யாரு அவரை சீண்டியிருக்கப் போறாங்க. ஒரு போலி மனிதனை இன்னொரு போலி மனிதனோடு ஒப்பிட்டிருக்காருன்னு நாங்க பாட்டுக்கு போயிக்கிட்டே இருப்போம். இசை ஞானி, அரசியல் ஞானம் இல்லாதவரா இருக்காருன்னு ஒரு ஆதங்கம், நமக்கு ரொம்ப பிடிச்ச மனுசனை இப்படி பேச வேண்டியிருக்கே என்ற வருத்தம் இதெல்லாம்தான் அவர் இசையோடு நிறுத்திக் கொண்டால் நல்லது என்று எழுதினேன். அதற்கான உரிமை எனக்கும் இருக்கிறது மிஸ்டர்.

      அப்புறம் என்ன, சு.வெ NOBODY யா? இந்த வரியில் உங்க சங்கிக் கொண்டையை மறைக்க மறந்துட்டீங்களே! உங்க அறியாமை, பொறாமையில் தீயை வைக்க! இந்த ஒரு வார்த்தையே பதில் சொல்ல அருகதையற்றவர் நீங்கள் என்பதை உணர்த்துகிறது.

      சமீபத்தில் தோழர் சு.வெ நிகழ்த்திய ஒரு அற்புதமான உரையை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். அதைப் படிச்சாவது அறிவை வளர்த்துக் கொள்ளவும் மிஸ்டர் காவிக் கண்ணாடி.

      Delete
  3. அதென்ன திருவையாறு சம்பவம்?

    ReplyDelete