Friday, April 1, 2022

இம்ரான் கானும் மோடியும் தைரியமும்

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் முதல் பக்கத்தில் இரண்டு செய்திகளை படித்தேன்.

ரஷ்யாவுடன் இந்தியா வணிக பரிவர்த்தனைகளை மேற்கொண்டால் தீவிரமான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்காவின் துணை பாதுகாப்பு ஆலோசகர் திலீப்சிங் என்பவர் இந்தியாவிற்கு வந்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை மிரட்டி உள்ளார்.

இன்னும் ஒரு நாளில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்து பதவியை இழக்கும் தருவாயில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தொலைக்காட்சி உரையில் தனக்கு எதிராக ஒரு அன்னிய சக்தி தன் எதிரிகளோடு இணைந்து சதி செய்வதாகவும் அந்த அன்னிய சக்தி அமெரிக்கா என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார்.

ஆக பாகிஸ்தான் அரசியலிலும் அமெரிக்கா தலையிடுகிறது. இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருக்கக் கூடாது என்றும் இந்தியாவை மிரட்டுகிறது.

இம்ரான் கான் அமெரிக்காவை வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். அதை பதவி போகப் போவதனால் வந்த தைரியம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்கா  இந்தியாவை வெளிப்படையாக மிரட்டுகிறதே, அதற்கு 56 இஞ்ச் மார்பு கொண்ட வீராதி வீர, சூராதி சூர மோடி என்ன எதிர்வினை ஆற்றப் போகிறார்? இம்ரான் கானே துணிந்து குற்றம் சுமத்தும் போது மோடி மட்டும் சும்மா இருந்து விடுவாரா என்ன?

பார்க்கத்தானே போறோம் மோடியோட தைரியத்தை?

 

2 comments:

  1. Answer already given.

    உலகின் தற்போதைய நிலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் வாங்குவதைப் பற்றிய கேள்வி எழுப்பப்படுகிறது.அதில் பொட்டிலடித்தது போல சொல்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்..👇
    "எனது நாட்டின் நலனுக்குத்தான் முதலிடம்,எனது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்குத்தான் முதலிடம்,அப்படிப் பார்க்கும் போது சலுகை விலையில் எரிபொருள் கிடைக்குமானால் அதை ஏன் நான் வாங்கக் கூடாது? "..
    -------------
    இந்தியா தனக்கென்ற சுதந்திர பாதையையும்,வலுவான அரசியல் தத்துவங்களையும் கொண்ட நாடு.அதை தயங்கி தயங்கி இனி எங்கேயும் பதிய வைக்க வேண்டியதில்லை

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவை இது வரை கண்டிக்கவில்லை. 56 இஞ்ச் மார்பர் எங்கே?

      Delete