உலகின் முதல் புரட்சித் தலைவர் லெனினின் பிறந்த நாள் இன்று. புரட்சித் தலைவர்/தலைவி என்ற அடைமொழிக்கு பொருத்தமில்லாமல் பலர் அப்படி ஒரு பட்டத்தை சுமந்து திரிந்தனர் என்பது வேறு விஷயம்.
இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை என்ற அடிப்படை விஷயங்கள் மட்டுமல்ல, தொழில் துறை, விண்வெளி ஆய்வு என பல முன்னேற்றங்களை சோசலிச சமுதாய அமைப்பில் சாதிக்க முடியும் என்பதற்கான அடித்தளம் அமைத்த சாதனை மனிதன்.
உழைக்கும் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியை உருவாக்கி முன்னுதாரணம் படைத்த லெனின் புகழ் என்றென்றும் வாழியவே.
அற்ப புத்தி கொண்டவர்களால் திரிபுராவில் தோழர் லெனினின் சிலை
சிதைக்கப்பட்ட போது அவரது சிலை நெல்லையில் கம்பீரமாய் எழுந்தது.
No comments:
Post a Comment