Tuesday, April 5, 2022

எச்.ராசா சொன்ன மாதிரிதான் மதிக்கறாங்க ஜட்ஜய்யா?

 


அதிகமான குற்றவாளிகள் தண்டனை பெறத்தான் குற்றவியல் சட்டத்தை மாற்றுவதாக அமித் ஷா கூறியதாக காலையில் எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

நிஜமாகவே தண்டிக்கப்படுபவர்களின் சதவிகிதம் அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளதா?

போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றிக் கொண்ட மோடி மந்திரியின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றஃ வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

கடந்த வாரம் நடந்த விசாரணை குறித்த பதிவை இந்த இணைப்பின்  மூலம் சென்று படியுங்கள்.

“நாங்கள் நியமித்த நீதிபதி சொல்லியும் ஏன் உபி அரசு பிணையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்யவில்லை?”

என்று தலைமை நீதிபதி கேட்கிறார்.

“சாட்சியங்களை மிரட்டி விடுவார் என்ற அச்சத்தில் பிணையை ரத்து செய்ய சொல்கிறார்கள். சாட்சிகளுக்கு பாதுகாப்பு கொடுத்துள்ளோம். அதனால் பிணையை ரத்து செய்ய வேண்டிய அவசியமில்லை”

என்று பதில் சொல்கிறார் மொட்டைச்சாமியாரின் வக்கீல் மகேஷ் ஜேத்மலானி.

சாட்சிகளில் ஒருவர் கடத்தப்பட்டு மோசமான தாக்குதல் நடந்துள்ளது என்று பாதிக்கப்பட்டவர்களின் வக்கீலான துஷ்யந்த் தாவே சொல்ல

அதையெல்லாம் பேசி வழக்கை திசை திருப்பாதீர்கள் என்று சொல்கிறார் மகேஷ் ஜேத்மலானி.

இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள முடிகிறது?

பாஜக அரசு அது ஒன்றிய அரசோ அல்லது மாநில அரசுகளோ, அவர்கள் நீதிமன்றத்தை எச்.ராசா சொன்னது போலத்தான் மதிக்கிறார்கள்.

இப்போதாவது புரிந்ததா ஜட்ஜய்யா?

குற்றவாளி தண்டனை பெற வேண்டும் என்று விரும்புகிறோம் என்று அமித்து சொல்வதும் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!


No comments:

Post a Comment