பொதுவாக "ஹால்டிராம்" நிறுவனத்தில் சோங்கேக், சோன் பப்டி தவிர வேறு எதையும் வாங்கியதில்லை. அதன் கார வகைகளில் இருக்கும் ஒரு அசட்டு தித்திப்பும் அந்த வட இந்தியாவுக்கே உரிய அந்த நெடியும் ஒத்துக் கொள்வதில்லை.
ஆனால் இனிமேல் ஹால்டிராம் பொருட்களை வாங்கி பயன்படுத்தலாம் என்று யோசிக்கிறேன்,
ஆமாம்.
சங்கிகளின் சுதர்ஷன் தொலைக்காட்சித்தின் நிருபர், ஹால்டிராம் பேக்கெட்டில் உருது மொழியிலும் அச்சடித்துள்ளதை முன்வைத்து அந்நிறுவனத்தின் விற்பனை மையத்தில் கலாட்டா செய்துள்ளார். முஸ்லீம்களின் மொழியை ஏன் பயன்படுத்தி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறாய் என்பதுதான் அந்த நிருபர் பெண்ணின் கேள்வி. முதலில் பொறுமையாக விளக்கம் சொன்ன ஹால்டிராம் கம்பெனி ஊழியர் ஒரு கட்டத்தில் இனி பேச முடியாது என்று மௌனமாகிறார்.
உடனே நீ மிருகக் கொழுப்பை பயன்படுத்துகிறாய் என்று அடுத்த அவதூறை ஆரம்பித்து விட்டார்.
இனி சங்கிகள் "ஹால்டிராம் புறக்கணிப்பு " என்று ஆரம்பிப்பார்கள்.
அதனால்தான் சொல்கிறேன்.
இனி எண்ட ஸ்னாக்ஸ் "ஹால்டிராம்"
புரியவில்லை, மிருக கொழுப்பை பயன்படுத்திகிறார்கள் என சொல்லி புறக்கணிப்பார்களா, இல்லை நாங்கள் மிருக கொழுப்பேறியவகள் என சொல்லி புறக்கணிப்பார்களா?
ReplyDelete