இணையத்தில் எதையோ தேடிய போது கண்ணில் பட்டது ஒரு செய்தி.
டாக்டர் ஆனந்த் ராய் எனவர் மபியில் உள்ள ஒரு அரசு டாக்டர்,
ஆர்.எஸ்.எஸ் காரர். மபியில் சங்கிகள் செய்த வியாபம் ஊழல் மற்றும் கொலைகள் நினைவில்
உள்ளதா?
பணி நியமனத்திலும் உயர் மருத்துவப்படிப்புக்கான நுழைவுத்
தேர்வுகளிலும் ஊழல், ஆள் மாறாட்டம் நடக்கிறது என்று கண்டு பிடித்து
அம்பலப்படுத்தியவர்களில் அவரும் ஒருவர்.
ஒரு மிகப் பெரிய ஊழலை அம்பலப்படுத்திய காரணத்திற்காக
ஆர்.எஸ்.எஸ் என்ன செய்தது தெரியுமா?
கௌரவித்திருப்பார்கள், பாராட்டியிருப்பார்கள் என்று நினைத்தால்
நீங்கள் ரொம்பவே நல்லவர்..
பாஜக அரசின் ஊழலை வெளிப்படுத்துவதா என்று வெகுண்டெழுந்த
ஆர்.எஸ்.எஸ் அவரை அம்போவென்று கைவிட்டு விட்டது. அவரை எந்த கூட்டத்திற்கும்
வரக்கூடாது என்று தடை போட்டு விட்டது.
அது மட்டுமா, அவருக்கு அளிப்பதாக அறிவித்திருந்த விருதையும்
கிடையாது என்று சொல்லி விட்டது.
ஆர்.எஸ்.எஸ் இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்தால் அரசு மட்டும்
சும்மா இருக்குமா?
அவரை மட்டுமல்ல, அரசு மருத்துவரான அவரது மனைவியையும் பணியிடை
நீக்கம் செய்து விட்டது.
காரணம் என்ன சொன்னார்கள் தெரியுமா?
“குழந்தை பராமரிப்பு விடுப்பு” கேட்டு விண்ணப்பித்த
குற்றத்திற்காக.
வியாபம் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை
தொடர்பான ஆவணங்களை வெளியிடப்ப் போவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது அவரை
கைதும் செய்து விட்டது.
ஊழல் இல்லாத கட்சி பாஜக என்று யாராவது கூறினால், எழுதினால்
அங்கே நன்றாக சிரித்து வையுங்கள்.
பேயரசு ஆட்சியில் இப்போது அது மட்டும்தானே சாத்தியம் . . .
No comments:
Post a Comment