Tuesday, April 12, 2022

மூன்று சமஸ்கிருத எழுத்துக்கள் கொண்ட பெயர்


பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். அவரது நண்பர் ஏன் அவர் மீது கடுப்பாகி ப்ளாக் செய்தார் என்று எனக்கு புரியவில்லை. உங்களுக்காவது புரிஞ்சா சரி.

"மச்சீ, உன்கிட்ட ஒன்னு கேக்கலாமா?" என்று தயக்கத்துடனேயே நீண்ட காலத்திற்குப் பிறகு நண்பன் ஒருவன் வாட்சப்பில் மெசேஜ் அனுப்பிருந்தான்.
"சொல்டா. என்ன பிரச்சனை?" என்று கேட்டேன்.
"எனக்கு பையன் பொறந்துருக்கான்"
"வாவ். வாழ்த்துகள்டா. அதுல என்ன பிரச்சனை?" என்றேன்.
"அவனுக்கு ஒரு நல்லதா ஒரு பேர் வைக்கனும். அதான் உன்கிட்ட கேக்கலாம்னு பாத்தேன்" என்று அவன் தயங்கித் தயங்கி அந்த மெசேஜை டைப் பண்ணிருப்பான் என்று கணித்தேன்.
"அதுக்கென்னடா. சொல்லிட்டாப் போச்சி" என்று மனதுக்குள் பல பெயர்களை யோசிக்கத் துவங்கினேன்.
"என் குடும்பத்துல எல்லாரும் பையனுக்கு ஒரு சமஸ்கிருதப் பெயர் தான் வெக்கனும்னு அடம்புடிக்கிறாங்க. இப்ப அதான் ட்ரெண்டாமே. நீதாண்டா ஏதாவது ஹெல்ப் பண்ணனும்" என்றான்.
"சரி, இவ்வளவு தூரம் கெஞ்சிக் கேக்குற. முயற்சி பண்றேன்." என்றேன்.
"தேங்க்ஸ்டா" என்றான்.
"அது சரி, நான் ஒரு பெயர் சொன்னா, அது சமஸ்கிருதப் பெயர்தான்னு எப்படி கண்டுபிடிப்ப?" என்று கேட்டேன்.
"அதுவா, இந்த 'ஷ' இல்லன்னா 'ஹ' இல்லன்னா 'ஜ' மாதிரி எழுத்துகள் அந்த பெயர்ல வந்தாலே அது சமஸ்கிருதப் பெயர் தான்" என்று சமஸ்கிருத விளக்கம் கொடுத்தான்.
"ஓ அப்படியா. சரி, அதுல இருந்து ஒரு எழுத்து மட்டும் தான் பெயர்ல இருக்கனுமா? இல்லன்னா நீ சொன்ன மூணு எழுத்துக்களும் இருக்கலாமா?" என்று என் சந்தேகத்தைக் கேட்டேன்.
"எத்தனை சமஸ்கிருத எழுத்துக்கள் இருக்கோ, அந்தளவுக்கு நல்லதுடா" என்றான்.
"அப்படியா. நீ சொன்ன மூணு எழுத்துகளுமே இருக்கிற மாதிரி ஒரு பெயர் சொல்றேன் பாரு" என்று ஒரு சிறிய இடைவெளி விட்டேன்.
அவன் நிச்சயமாக என்னுடைய மெசேஜுக்காக இந்நேரம் ஆர்வமாக போனையே பார்த்துக்கொண்டிருப்பான் என்பது உறுதி.
"ஷாஜஹான்" என்று டைப் செய்து அனுப்பினேன்.
"அடேய். ஒரு இந்துப் பெயரைக் கேட்டால் இசுலாமியப் பெயரைப் போய் சொல்றியேடா" என்று பதட்டமானான்.
"நீ சொன்ன மூணு எழுத்துமே அதுல இதுக்கேடா" என்று பதில் அனுப்பிவிட்டுப் பார்க்கிறேன், நான் அனுப்பிய மெசேஜ் டெலிவர் ஆகவில்லை. அடுத்த நொடியே அவனுடைய ப்ரொபைல் படத்தையும் காணவில்லை.
ஒருவேளை என்னை ப்ளாக் செய்திருப்பானோ
🤔🤔🤔
சரி இருந்துட்டுப் போகட்டும். வேற யாராவது சமஸ்கிருதப் பெயர் கேட்டால் அவர்களுக்குக் கொடுக்கவாவது பயன்படும்...

ஒரு நீதி சொல்லாம இந்த பதிவை முடிக்கக் கூடாதே, அது ஆன்டி க்ளைமேக்ஸ் மாதிரி மொக்கையா இருந்தாலும் கூட.

"அரியும் சிவனும் ஒன்னு. அதை அறியாதவர்கள் வாயில மண்ணு" என்று சைவர்களும் வைணவர்களும் மோதிக் கொண்டிருந்த காலத்தில் சொன்னார்கள்.

இப்போது பரஸ்பர மோதல் இல்லை. ஆனால் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நாட்ட சங்கிகள் இந்துக்கள் எனும் போர்வையில் இஸ்லாமியர்களை தாக்குகின்றனர்.

அவர்களிடம் சொல்ல வேண்டியது ஒன்றைத்தான்.

ஒரு இஸ்லாமியப் பெயரில்தான் மூன்று சமஸ்கிருத எழுத்துக்கள் இருக்கிறது,

 

No comments:

Post a Comment