தோழர் இரா.எட்வின் அவர்களின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்
அன்பிற்குரிய திரு பாக்கியராஜ் அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று (20.04.2022) காலை கமலாலயத்தில் தாங்கள் பேசியதையும்,
அதற்கான கடுமையான எதிர்வினைகளைக் கண்டபிறகு நீங்கள் கொடுத்த விளக்கத்தையும் கேட்டபிறகு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்
அந்த விளக்கத்தில் கீழ்க்காணும் நான்கு விஷயங்களும் எனக்கு முக்கியமாகப் படுகின்றன
1 தமிழ்தான் தங்களுக்கு சோறுபோடுவதாக நீங்கள் கூறியது
2 “குறைப்பிரசவம்” என்று கூறியதற்காக பாதிக்கப்பட்டவர்களிடம் நீங்கள் மன்னிப்பு கோரியது
3 திராவிடத் தலைவர்களும் தோழர் ஜீவாவுமே தங்களைக் கவர்ந்த தலைவர்கள் என்று நீங்கள் கூறியது
4 தாங்கள் பாஜககாரர் இல்லை என்று நீங்கள் கூறியது
தமிழ் தங்களுக்கு சோறுபோடுவதாக நீங்கள் கூறுவதை
தமிழ்மக்கள் உங்களது திரைப்படங்களுக்கு வாரி வழங்கும் பணம் என்றுதான் என்னால் கொள்ள முடிகிறது
அந்த தமிழ் மக்கள் வழங்கிய செல்வத்தால் வசதியாக வாழும் தாங்கள்
அந்த எளிய மக்களின் விருப்பங்களுக்கு எதிராக
அவர்களது உயிரினும் மேலான மொழிக்கொள்கைக்கு எதிராக
இந்தியில்தான் அண்டை மாநில மக்களோடு உரையாட வேண்டும் என்று சண்டமாருதம் செய்யும் ஒரு கட்சியின் தலைவரை இப்படிப் பிடிவாதமாகப் புகழும் உங்கது உரை தற்செயலானது என்று என்னால் ஏற்க இயலவில்லை சார்
மன்னிப்பு கோரியதற்கு பின்னால் அதுகுறித்து பேச விரும்பவில்லை
ஆனாலும்
7 மாதத்தில் பிறந்த தனது குழந்தையை
13 ஆண்டுகளாக கர்ப்பத்தில் வைத்து பாதுகாப்பதுபோல பாதுகாத்து வரும்
வகுப்பில் அவன் முதல் இடம்
விளையாட்டில் சொல்லிக்கொள்கிற மாதிரியான இடம்
என்பனவற்றை எல்லாம் கேட்டு ஈரக்கண்களோடு
பூரிக்கும் எனது தோழியின்
பதட்டத்தை,
அக்கறையை
அர்ப்பணிப்பை
உங்களது அந்த வார்த்தைப் பிரயோகம் எவ்வளவு கிழித்திருக்கும் என்பது எங்களை என்ன பாடு படுத்தியது என்பதை அருள்கூர்ந்து உணருங்கள் திரு பாக்கியராஜ்
வளர்ச்சியின் நாயகன் என்ன செய்தாலும் தூற்றினால் எப்படி என்கிறீர்கள்
அவர் செய்த நல்லனவற்றை முடிந்தால் பட்டியலிடுங்கள் சார்
விவாதிப்போம்
அவரது பயணங்கள் குறித்து திராவிடத் தலைவர்களாலும் ஜீவாவாலும் ஆகர்சிக்கப்பட்ட நீங்கள் வியந்தோதுவது
அநாகரிகமானது
திராவிடத்தலைவர்களின் பயணங்களும் ஜீவாவின் பயணங்களும்
நமக்கு என்னென்ன கொடுத்தன
உங்கள் நாயகன் பயணங்கள் என்னென்ன கொண்டுவந்து சேர்த்தன
எப்போது எங்கு உரையாடலாம் சார்
சீன ஆக்கிரமிப்பு குறித்து உங்கள் நாயகரின் செயல் என்ன என்று உங்களால் எடுத்துவைக்க முடியுமா சார்
மற்றபடி நீங்கள் பாஜகவா இல்லையா என்பது குறித்தெல்லாம் எமக்கு எந்தக் கவலையும் இல்லை திரு பாக்கியராஜ் சார்
நன்றி
அன்புடன்,
இரா.எட்வின்
No comments:
Post a Comment