Tuesday, April 19, 2022

ராஜினாமா செய்யுங்கய்யா . . .

 


மோடியின் அயோக்கிய மந்திரியின் கொலைகார மகனுக்கு போராடிய விவசாயிகளின் மீது காரேற்றிக் கொன்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்றம் வழங்கிய பிணையை உச்ச நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

"அப்படி என்ன கிழிக்கப் போறேன்னு இவ்வளவு அவசரம் காட்டினாய்?' என்று பிணை கொடுத்த நீதிபதியை சாடிய உச்ச நீதிமன்றம்

"நாங்கள் நியமித்த சிறப்பு புலனாய்வுக்குழுவும் அதன் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதியும் வலியுறுத்தியும் பிணையை ரத்து செய்ய மேல்முறையீடு செய்யாதது தவறு, உள்நோக்கம் உள்ளது" என்று மொட்டைச்சாமியார் அரசையும் கண்டித்துள்ளது.

பிணை வழக்கு மீண்டும் உயர்நீதி மன்றத்துக்கு வரும் போது "வேறு நீதிபதியிடம் வழக்கு செல்ல வேண்டும்" என்று பாதிக்கப்பட்டவர்களின் வக்கீல் முறையிட்ட போது "அதெல்லாம் அந்தாளே ஒதுங்கிடுவான்" என்றும் நக்கலடித்துள்ளது.

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை உள்ளவர்கள் என்றால் அந்த நீதிபதி, மொட்டைச்சாமியார், அயோக்கிய மந்திரி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆனால் மோடி வகையறாக்களுக்கு அதெல்லாம் கிடையாது.

பிகு: தற்போது உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடு நிறைவளித்தாலும் கவலையளிக்கும் செய்தி ஒன்று உண்டு.

அது என்ன?

மாலை பார்ப்போம். 


No comments:

Post a Comment