Saturday, April 2, 2022

இலங்கையில் இனி ???????

 
ஏற்கனவே சிக்கலில் சிக்கித்  தவிக்கும்  நாடு இலங்கை. மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஆட்சியாளர்கள் என்பதால் பொருளாதார நெருக்கடியைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்ட களத்திற்கு வருவது இயல்பானதுதான். 

ஆனால் அதை சகித்துக் கொள்ள முடியாத இலங்கை அரசு அவசர நிலைக் காலத்தை அறிவித்துள்ளது. மக்களின் உரிமைகள் அனைத்தும் முழுமையாக  முடக்கப்பட்டு விட்டது. 

இலங்கையின் நிலை இனி என்ன ஆகுமோ?

உசுப்பப்பட்ட உணர்வுகளின் அடிப்படையில் ஆள்வோரை தேர்ந்தெடுத்தால் அவதிப்படுத்துவதைத் தவிர மக்களுக்கு வேறு மார்க்கமில்லை.

அது இலங்கைக்கும் போருந்தும், இந்தியாவுக்கும் பொருந்தும்.

2 comments:

  1. கம்பெனிகள் திவால் ஆவது சகஜம் .ஆனால் ஒரு நாடே திவால் ஆகப்போகிறது
    என்பதற்கு உதாரணம் இலங்கை . லக்ஷக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்து
    சிங்களர்களை தன்னை ஆதரிக்க வைத்து பதவிக்கு வந்த ராஜபக்சே குடும்பத்தை
    நாட்டை விட்டு வெளியேற்ற மக்கள் புரட்சி செய்வதை தடுக்க எமர்ஜன்சி கொண்டு வந்துள்ளனர் .
    இலங்கை நிலை வேறு . இந்தியா நிலை வேறு .இலங்கையில் சிங்களர்களும் தமிழர்களும் மட்டுமே .
    ஆனால் இந்தியாவில் பலதரப்பட்ட மக்களும் அந்தந்த மாநிலங்களில் சுதந்திரமாக வாழ்கின்றனர்..

    ReplyDelete
    Replies
    1. //இந்தியாவில் பலதரப்பட்ட மக்களும் அந்தந்த மாநிலங்களில் சுதந்திரமாக வாழ்கின்றனர்// காமெடி செய்யாதீங்க

      Delete