புகைவண்டி வருகை, தாமதம் ஆகியவை குறித்து அறிய RAILYATRI எனும் APP ஐ பயன்படுத்துகிறேன்.
பொதுவாக அதில் கிடைக்கும் தகவல் சரியாகவே இருக்கும். ஆனால் கடந்த 22.04.2022 அன்றைக்கு அதற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
சென்னை சென்ட்ரலில் காலை 6 மணிக்கு மைசூர் செல்லும் சதாப்தி புறப்பட வேண்டும். நான் காட்பாடியில் இறங்க வேண்டும் என்பது வேறு விஷயம்.
ஆறே கால் மணி வரை ரயில் புறப்படவில்லை. சரி ரயில்யாத்ரி என்ன சொல்கிறது என்று பார்ப்போம் என்று பார்த்தால் அதன் படி ஒரு நிமிடம் தாமதமாக புறப்பட்ட ரயில் 6.07 க்கெல்லாம் வில்லிவாக்கத்தை கடந்து விட்டதாகச் சொன்னது.
ஒரு வழியாக ஆறு முப்பது மணிக்கு வண்டி கிளம்ப, ஆப்போ வண்டி
அம்பத்தூருக்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னதாக இருப்பதாகச் சொன்னது. ஏன் இந்த
குளறுபடி என்று தெரியவில்லை.
வண்டி சரியாக வரும் வேளையில்
தாமதமாக வருகிறது என்று ஆப் சொல்லி அதை நம்பி தாமதமாக ரயில் நிலையத்துக்கு
வந்தால் என்ன ஆகும்?
ஆப்பை பார்க்காமல் சரியான நேரத்துக்கு ரயில் நிலையம் செல்வதே மேல்.
பிகு : அன்று காலை சென்னை சென்ட்ரல் நிலையத்தில் அமர்ந்து கொண்டு தகவல் பலகைகளை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. அதையும் எழுதுவேன்.
No comments:
Post a Comment