Friday, April 15, 2022

தேனும் மீனும் ராமனும்

 


 சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது மாநில மாநாட்டில் மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் ஆற்றிய வரவேற்புரையை முன்னரே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அந்த உரையின் ஒரு பத்தியை மட்டும் இப்போது மீண்டும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை சங்கிகள் உருவாக்கியுள்ளார்கள்.


அரசியல் மாநாட்டின் வரவேற்பில் உணவும் உபசரிப்பும் பற்றிய குறிப்பில்லாமலா? என்று நினைக்க வேண்டாம். எல்லா உணவிலும் உபசரிப்பிலும் அரசியலே இருக்கிறது. ஆம், காட்டுக்கு வந்த இராமனை குகன் வரவேற்றதைப் பற்றி வால்மீகி எழுதுகிறார், அப்பமும், பாயாசமும் கொடுத்து வரவேற்றான் என்று. அதையே துளசிதாசர் எழுதுகிறார், பழங்களும் கிழங்குகளும் கொண்டு வரவேற்றான் என்று. ஆனால் தமிழ்ப் பெருங்கவி கம்பன் என்ன எழுதினான் தெரியுமா? தேனும் மீனும் கொண்டு வரவேற்றான் என்று. எங்கள் உணவே, எங்கள் அரசியல்; எங்கள் அரசியலே எங்கள் உணவு. எதை உண்ண வேண்டும், எதை உண்ணக்கூடாது என கட்டளை பிறப்பிக்கும் பாசிஸ்ட்டுகளுக்கு எதிரான மாநாட்டில் “உணவாலும் அடிப்போம்” என்று இருபொருள் மொழியச் சொல்கிறேன். மீனும், ஊனும் கொண்ட விருந்தளிக்க வரவேற்புக்குழு காத்திருக்கிறது.

தேனும் மீனும் சாப்பிட்ட ராமனின் பெயரில் அசைவ உணவுகளை சாப்பிட்ட மாணவர்கள் மீதே  கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றால் குகன் கொடுத்த மாமிச உணவை ஏற்றுக் கொண்ட ராமன் மீதும் கண்ணப்பர் கொடுத்த மாமிச உணவை ஏற்றுக் கொண்ட சிவ பெருமான் மீதும் எப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்துவார்கள்!

அநேகமாக அவர்கள் கொள்கை வழி நின்று ராமனுக்காக அயோத்தியில் உச்ச நீதிமன்ற ஆசீர்வாதத்துடன் கட்டப்பட்டு வரும் கோயிலையும் வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோயிலையும் தாக்கி இருவரின் சிலைகளையும் சேதப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

 

No comments:

Post a Comment