அந்த செய்தியை அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் மனதிலும் மகிழ்ச்சி நிலவும்.
ஆம்.
சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் கோவிட் வார்டில் இப்போது ஒரு உள் நோயாளி கூட கிடையாது.
கோவிட் வார்ட் காலியாக இருக்கிறது என்பது எவ்வளவு நல்ல செய்தி!
பெருந்தொற்று கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருப்பதன் அடையாளமல்லவா இது!
இந்த காலகட்டத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை ஊழியர்கள் ஆகியோர் அர்ப்பணிப்புணர்வோடு பணியாற்றினார்கள். நானறிந்த வரை தொற்றுக்கு உள்ளானவர்கள் அங்கே செல்லத்தான் முன்னுரிமை கொடுத்தார்கள்.
கிட்டத்தட்ட 65,000 உள் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்கள். அவர்களில் 95 % க்கு மேலானவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்கள் தோழர் என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு உட்பட.
நோயற்ற வாழ்வே எல்லா செல்வங்களையும் விட மேலானது என்பதை கோவிட் 19 உணர்த்தியுள்ளது.
அதை மனதில் கொண்டு செயல்படுவோம்.
சென்னை ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை ஊழியர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
No comments:
Post a Comment