முந்தைய பதிவின் தொடர்ச்சி.
சுமார் 20 வருடங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த போது
பணிக்கர் ட்ராவல்ஸ் மூலமாக ஆக்ரா, மதுரா, பிருந்தாவன்” எல்லாம்
சென்றிருந்தோம்.
மதுராவிலிருந்து பேருந்து கிளம்பும் முன்பு பஞ்சக்கச்சம் அணிந்த ஒரு முதியவர் பேருந்தில் ஏறி “மதுராவில் கிருஷ்ணர் அவதரித்த இடத்தை அவுரங்கசீப் ஆக்கிரமித்து மசூதி கட்டி கிட்டார், அதன் பக்கத்தில் இருந்த இடங்களை எல்லாம் டால்மியா புத்திசாலித்தனமாக வாங்கி கிருஷ்ணருக்கு கோயில் கட்டி விட்டார். ஆனாலும் மசூதியை இடிப்பதுதான் சரியாக இருக்கும். ஆகவே அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று நல்ல ஆங்கிலத்தில் மனப்பாடம் செய்ததை ஒப்பிப்பது போல பேசி விட்டு கையில் துண்டோடு பணம் கேட்டு சீட் சீட்டாக வந்தார்.
“போய் டால்மியா கிட்டயே பணம் வாங்கிக் கொள்ளூங்கள்” என்று நான் சூடாக ஆங்கிலத்திலேயே பதில் சொன்னேன். அவரோ திருதிருவென்று முழித்து “கியா, கியா” என்று கேட்டார்.
நாங்கள் சென்ற பேருந்தின் கைட் என்னிடம் வந்து “சார் இவருக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியாது. சொல்லிக் கொடுத்ததை அப்படியே பேசுவார். அவ்வளவுதான்” என்றார். இவங்களை எல்லாம் ஏன் பஸ்ஸில விடறீங்க என்று கேட்டதற்கு, அனுமதிக்கவில்லையென்றால் தகராறு செய்வாங்க, கண்ணாடியெல்லாம் உடைச்சுடுவாங்க, வேறு வழியில்லை” என்றார்.
சங்கிகள் அன்றிலிருந்து இன்று வரை கொஞ்சம் கூட மாறவில்லை.
யாரோ எழுதிக் கொடுத்ததை அப்படியே ஒப்பித்த அந்த முதியவர் போன்ற கிளிப்பிள்ளைகளாகவே இன்றைய சங்கிகளும் காபி பேஸ்ட் ஆசாமிகளாக இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment