சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Friday, May 31, 2019
மோடி சைக்கிளில் மறைத்த ரத்தக்கறை
மூங்கில்
குடிசையில் வசிக்கும் ஏழை,
சைக்கிளில்
மட்டுமே பயணிக்கும் எளிய வேட்பாளர்,
ஒடிஷாவின்
மோடி
இப்படியெல்லாம்
காவிகளால் சமூக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி.
ஒரு
சாதாரண கதர் ஜிப்பா அணிந்த இந்த தாடி வைத்த மனிதர் நேற்று மோடியின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
ஒரு
எளிய மனிதரை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் மோடி என்று சங்கிகளின் பெருமிதத்திற்கு
அளவே இல்லை.
ஆனால் அந்த எளிமைக்குப் பின்னே ஒளிந்திருப்பது மோசமான
ஒரு மனிதர், மத வெறி பிடித்த ஒரு மிருகம் என்பதை பி.பி.சி அம்பலப்படுத்தி உள்ளது.
கிரஹாம்
ஸ்டெய்ன்ஸ் நினைவில் உள்ளாரா?
அவரும்
அவரது இரண்டு மகன்களும் எரித்துக் கொல்லப்பட்ட
கொடூர சம்பவம் நினைவில் உள்ளதா? பஜ்ரங் தள் என்ற ஆர்.எஸ்.எஸ் ஸின் அடியாள் பிரிவுதான்
அந்த அராஜகக் கொலைகளை நிகழ்த்தியது என்பதும் நினைவில் உள்ளதா?
இந்தியாவை
உலக அரங்கில் தலை குனிய வைத்த அந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய பஜ்ரங் தள் அமைப்பின்
அன்றைய ஒரிஸா மாநிலத் தலைவராகவும் நேரடியாக அக்கொலையைச் செய்த தாராசிங்கின் வழிகாட்டியுமாக
இருந்ததும் யார் தெரியுமா?
இதோ
இப்போது
சைக்கிளில்
பயணிக்கும் எளியவராகச் சொல்லப்படுகிற
மோடியின்
புதிய மந்திரி
பிரதாப்
சந்திர சாரங்கிதான்.
அந்த
வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டதால் தலை மறைவாக இருந்தவர்
அவர்.
அது
மட்டுமல்ல, 2001 ல் ஒடிஷா மாநில சட்டப் பேரவையை தாக்கிய கலவர வழக்கிலும் பிரதான குற்றவாளி
இந்த மனிதர்தான்.
சமூக
ஊடகங்களால் ஒரு குற்றவாளியை ஒரு குற்றவாளியை புனிதன் போல சித்தரிக்க முடியும் என்பதற்கான
சிறந்த உதாரணம் இந்த சாரங்கி.
வெடிகுண்டு
சாமியாருக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று காலையில் மோடிக்கு நன்றி சொல்லியிருந்தேன்.
இப்போதுதான் தெரிகிறது சீனியாரிட்டி அடிப்படையில் சாமியாருக்குப் பதிலாக சாரங்கிக்கு
கொடுத்திருக்கிறார் என்று.
தேங்க் யூ மோடி
இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ளீர்கள் மோடி.
உங்கள் ஆட்சியில் நாடு முழுதும் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஓடும் என்று உங்களின் முதல் காலகட்டத்தில் எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை. உங்களால் நல்லது செய்ய முடியாது, ஆனால் கெட்டது செய்து அதிலே மகிழும் சேடிஸ்ட் என்பதால்தான் உங்கள் மீது எதிர்பார்ப்பு கிடையாது. அது போலதான் உங்கள் ஆட்சிக்காலம் இருந்தது.
இப்போது இரண்டாம் ஆட்சிக்காலத்திலும் நல்லது நடக்கும் என்ற எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. ஆனால் கண்டிப்பாக கெட்டது செய்வீர்கள். ஏனென்றால் நீங்கள் நிஜமான வில்லன்.
பிறகு எதற்கு நன்றி என்று கேட்கிறீர்களா?
உங்கள் அமைச்சரவைப் பட்டியலைப் பார்த்தேன்.
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி சாத்வி பிராக்யா தாகூரை உங்கள் அமைச்சரவையில் இணைத்து அவருக்கு தீவிரவாத தடுப்புத் துறை பொறுப்பு கொடுக்காமல் விட்டீர்களே, அதற்காகத்தான் இந்த நன்றி
Thursday, May 30, 2019
மோடியை முந்திச் சென்ற நேசமணி
#Pray_For_Nesamani
என்பது
ஏதோ ஒரு காமெடிக்காக செய்யப்படுகிற வேலை என்றுதான் முதலில் தோன்றியது.
காமெடியாகத்தான்
துவங்கியுள்ளது. ஆனால் அது ஏற்படுத்திய விளைவு மோடி பக்தர்களை எரிச்சலிலும் கோபத்திலும்
ஆழ்த்தியுள்ளது.
இன்று
மோடி பதவியேற்கிற நாளன்று மோடி 2.0 என்பதை ட்ரெண்டிங் ஆக்க அவர்கள் முயன்றுள்ளனர்.
ஆனால்
இந்திய அளவில் முத;லாவதாகவும் உலக அளவில் இரண்டாவதாகவும் ட்ரெண்டிங்கானது என்னமோ
#Pray_For_Nesamani
அதற்குக் காரணம் கீழே உள்ள மீம் சொல்லும் உண்மை
தேர்தலில்தான்
தமிழர்கள் காவிகளுக்கு நல்ல மரியாதை கொடுத்தார்கள் என்றால் சமூக ஊடகங்களில் அதை விட அதிகமாக போட்டுத் தாக்கி விட்டனர். பாவம்!!!
எல்லையைக் காத்தால் இதுதான் கதி
ஆங்கில இந்து இதழின் முதல் பக்க செய்தி இது.
முகமது சனாவுல்லா - அஸ்ஸாமைச் சேர்ந்த இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். கார்கில் போரில் இவர் வெளிப்படுத்திய தீரத்திற்காக கௌரவ லெப்டினன்ட் பதவி அளிக்கப்பட்டவர். ராணுவ சேவைக்குப் பிறகு அஸ்ஸாம் எல்லைக் காவல் படையில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர்.
இதெல்லாம் நேற்று முன் தினம் வரைதான்.
இன்று எங்கே இருக்கிறார்?
சிறைச்சாலையில்
ஏன்?
ஏதாவது ஊழல் செய்தாரா?
கொலை, கொள்ளை ஏதாவது?
பாலியல் வன் கொடுமை?
இல்லை, எதுவுமே இல்லை.
இவர் இந்தியக் குடிமகன் கிடையாது என்று தீர்மானிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்ப்பட்டுள்ளார்.
ராணுவத்திலும் காவல்துறையிலும் பணியாற்றிய ஆவணங்கள் எல்லாம் வெறும் செல்லாக்காசாகத்தான் மதிக்கப்பட்டுள்ளது.
ஏன்?
அவர் பெயரே சொல்லும் காரணத்தை.
அஸ்ஸாமில் மதத்தின் அடிப்படையில்தான் குடிமகன் அந்தஸ்து முடிவு செய்யப்படும் என்று அமித் ஷா பேசியது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்த லட்சணத்தில் சந்தான பாரதிதான் உள்துறை அமைச்சராகப் போவதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள்.
சினிமாவில் நடக்கும் விபரீதம் இந்தியாவில் நிஜத்திலும்.
கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் சடலங்களின் மீதுதான் மோடி இன்று மீண்டும் பதவி ஏற்கப் போகிறார்.
ஆனால் ராணுவ வீரர்களை துச்சமாக மதிக்கும் கேடு கெட்ட கூட்டம் இதுதான்.
Wednesday, May 29, 2019
மோடி பேசிய உண்மை, அதிசயமாய்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாற்பது சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களோடு தொடர்பில் உள்ளார்கள். மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்னார்.
குதிரை பேர முயற்சி, ஆணவம், மிரட்டல் என்றுதான் அப்போது பார்க்கப்பட்டது.
ஆனால் மோடி அபூர்வமாக சொன்ன உண்மை அது என்பது நேற்று திரிணாமுல் எம்.எல்.ஏ க்கள் இருவர் பாஜகவில் சேர்ந்த போதுதான் புரிந்தது.
மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ வோடும் தொடர்பில் உள்ளோம் என்று சொல்லியிருந்தால் அந்த துரோகியை முன் கூட்டியே நீக்கி இருந்திருக்கலாம்.
இன்னும் ஏழு கட்ட இழுப்பு வேலை இருப்பதாக சொல்லியுள்ளார்கள்.
மேற்கு வங்கத்தில் என்னென்ன கூத்துக்கள் நடக்கப் போகிறதோ?
Tuesday, May 28, 2019
வித்தியாசமான மீம்கள் இவை
சிங்காரவேலர் மீம்ஸ் மன்றம் என்றொரு முகநூல் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுவுடமை சிந்தனைகளை மீம்ஸ் மூலம் மிக சுலபமாக விளக்குவதே இதன் நோக்கமாக உள்ளது.
இதனை தொடங்கி நல்ல கருத்துக்களை புரியும் படி சொல்லும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
சில முக்கியமான சித்திரங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
இப்போது முதல் பகிர்வு
Monday, May 27, 2019
ஆம், இந்தியா மாற்றப்பட்டு விட்டது!
மிகவும் முக்கியமான
கட்டுரை இது. நேற்றைய தீக்கதிர் இதழில் வெளியானது.
வெறுப்பரசியல் தேர்தலுக்குப் பின் அதிகமாகி விட்டது என்பதை முந்தைய பதிவிலேயே எழுதியிருந்தேன். மூன்றாவது சம்பவம் இன்று பீகாரில் நடந்துள்ளது. நாளை அது பற்றி எழுதுகிறேன்.
இப்போது இக்கட்டுரையை படியுங்கள்
ஹர்ஷ் மந்தர்
இது (பா.ஜ.க.வினால்)
திருடப்பட்ட தேர்தல் என நான் நம்பவில்லை. தேர்தல் முறைகேடுகள் ஒரு சிறுதாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் நாம் ஒரு உண்மையை அங்கீகரிக்க வேண்டும். இந்தியா
மாற்றப்பட்டு விட்டது. இந்த உண்மையை அது கசப்பானதாக இருந்தாலும் நாம் அங்கீகரிக்க
வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.
கும்பல்
படுகொலையாளிகளால் பாதிக்கப்பட்ட 14 மாநிலங்களுக்கு 28 முறைபயணம் மேற்கொண்டுள்ளேன்.
அப்பொழுது இந்த தாக்குதல்களின் ஒரு மிகமுக்கியமான அம்சத்தை நான் கவனித்தேன்.
இந்த கொடூர தாக்குதல்களின் அதீதமான வன்மம் என்னை மிகவும் பாதித்தது.
பீகார் மாநிலம் சித்தாமாரி எனும் இடத்தில் 82 வயது முஸ்லிம் முதியவர்
தாக்கப்பட்டது எனது நினைவுக்கு வருகிறது. ஒரு இந்து கோவிலில் பெண் கடவுள்சிலை
உடைக்கப்பட்டுவிட்டது. அதற்கு அந்த முஸ்லிம் முதியவர்தான் காரணம்என கூறி அவர்
கடுமையாக தாக்கப்பட்டார். 82 வயது முதியவரை தாக்கிய அந்த கும்பலில்
இளைஞர்கள், குழந்தைகள்,ஏன் ஒரு பெண் கூட இருந்தார். சிறிது கூட இரக்கம் இல்லாமல்
நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காணொலி மூலம் பதிவு செய்யப்பட்டது.
இன்றைய சூழல் இரு
தரப்பிலும் வெறுப்பை உருவாக்கிவிட்டது. இன்றைய ஆட்சியாளர்கள் ஒரு அம்சத்தில்
வெற்றி அடைந்துவிட்டனர். முஸ்லிம்கள், பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸ் உட்பட அனைத்து
எதிர்க்கட்சிகளும் ஒரே பக்கத்தில் உள்ளனர்; அதே சமயத்தில் இவர்களுக்கு எதிராக மோடி
தேசத்தை காக்க வலுவாக நிற்கிறார்; இந்தியா எனும் மகத்தான தேசம் எனில்
அது மோடிதான் எனும் ஒரு சமன்பாடை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் வெற்றி
பெற்றுள்ளனர்.
கும்பல் படுகொலைகளை
ஆய்வு செய்த பொழுது நான் கவனித்த ஒருமுக்கியமான கவலை தரும் அசாதாரணமான அம்சம்
என்னவெனில், இந்த வன்முறை குறித்து சாதாரண மக்களில் எவருக்கும் சிறிது கூட கருணை
அல்லது வருத்தம் இருந்ததாக தெரியவில்லை என்பதுதான். குஜராத் கலவரங்களின் பொழுது
கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை இந்துக்களில் ஒரு பகுதியினர் அரவணைத்தனர்;
உதவி செய்தனர். ஆனால் இந்த கும்பல் கொலைகளின் பொழுது அத்தகைய உதவி அல்லது
கருணை அறவே வெளிப்படவில்லை.
இந்த தேர்தல் ஒரு
உண்மையை உறுதிசெய்துவிட்டது என நான் உணர்கிறேன். என்ன உண்மை அது? இரு தரப்பிலும்
வெறுப்பு என்பது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இந்த வெறுப்பை விதைத்தவர்கள்
தமது கருத்தாக்கத்திற்கு ஏதுவாகஇந்தியாவை மறுகட்டமைக்க முயல்கின்றனர். குஜராத்தில்
இன்று வெளிப்படையாக வன்முறை இல்லை. வன்முறை அரங்கேற்றப்பட்டது; வெறுப்பு ஆழமாக
வேரூன்றப்பட்டுள்ளது; முஸ்லிம்கள் தனி இடத்தில் கொட்டடிகளில் வாழத்
துரத்தப்பட்டனர்; இந்துக்கள் தனியாகவும் முஸ்லிம்கள் தனியாகவும் வாழும் வகையில்
எல்லைகள் வகுக்கப்பட்டன. முஸ்லிம்களின் கொட்டடிகள் எவ்வித வசதிகளும் இல்லாதவாறு
உத்தரவாதம் செய்யப்பட்டது. வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது.
முஸ்லிம்கள், தலித்
மக்கள், இந்துக்கள், கிறித்துவர்கள் தனித்தனியாக வாழ வேண்டும்; அமைதியுடன்
வாழ வேண்டும்; ஆனால் அசமத்துவசூழலில் உரிமைகள் இழந்து வாழ வேண்டும்.
வன்முறைக்கு பிறகு அமைதிதிரும்புகிறது. ஆனால் இந்த அமைதிக்கு அடிப்படை
அசமத்துவமும் உரிமை பறிப்பும் என்பது முக்கியமானது. இத்தகைய ஒரு இந்தியாவை
உருவாக்காவே அவர்கள் முயல்கின்றனர்.நமது சமூக ஒப்பந்தத்தில் இத்தகைய பாதகமான
மாற்றம் உருவாகியுள்ளது. நமது அரசியல் அமைப்பு சட்டம் அளித்த அனைத்து
வாக்குறுதிகளும் தயவு தாட்சயமின்றி அழிக்கப்படுகின்றன.
வாக்கு இயந்திரங்களில்
முறைகேடு அல்லது தேர்தல் முறைகேடுகள் பற்றிய பிரச்சனை அல்ல இந்த தேர்தல்!
நமதுஇந்திய சமூகம் அடிப்படையில் மாறிவிட்டது என்பதை பற்றியது இந்த தேர்தல்! இந்த
கருத்தாக்கத்தை எதிர்த்து முறியடிக்க தவறிய எதிர்க்கட்சிகளின் தோல்வி பற்றியது
இந்த தேர்தல்!நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன்; ஏழை மக்களுக்கு பணியாற்ற
விரும்புகிறேன்; இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு நிற்கிறேன்; சமத்துவத்திற்கு குரல்
கொடுக்கிறேன் – இத்தகைய முழக்கம் அல்லது கோட்பாடுகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்ளது.
நவீன தாராளமய
முதலாளித்துவ நெருக்கடியின் தீப்பிழம்புகள் உலகம் முழுதும் பரவிக்கொண்டுள்ளன.
இத்தகைய முதலாளித்துவத்தின் வாக்குறுதி என்ன? நீ மேலும் மேலும் வசதி
படைத்தவனாக ஆகலாம்! பணம் உன் காலடியில் சேர்ந்து கொண்டேயிருக்கும்; ஒவ்வொருவருமே
பணக்காரனாக மாறலாம்! ஆனால் இந்த வாக்குறுதி நடக்கவில்லை! இந்த முதலாளித்துவத்தின்
மிகப்பெரிய தோல்வி என்பது என்ன? ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு
சந்தையில் இணைகின்றனர். ஆனால் அவர்களுக்கு வேலைஇல்லை.
இன்று நமது இந்திய
சமூகத்தில் உருவாகியிருக்கும் வெறுப்பு அரசியல் என்பது வாழ்வாதாரத்தை இழந்து
நிற்போருக்கு ஒரு சுய வறட்டு கவுரவத்தை உருவாக்கும் நீசத்தனமான செய்கை ஆகும். இது
அபின் அல்லது கஞ்சாவை போன்றது.ஒரு பொய்யான உலகத்தை உருவாக்குவதும் அதில் ஒருவனை
ஆளுமை செய்பவனாக கட்டமைப்பதும் போன்றது. வெறுப்புஅரசியல் மூலம் இன்னொரு பகுதியினரை
நீ வெல்ல முடியும்;அவர்களை நீ மண்டியிட வைக்க முடியும் எனும் ஒரு போதையை
உருவாக்குவதுதான் வெறுப்பு அரசியல்! அத்தகைய போதைதான் மக்களுக்கு
ஊட்டப்படுகிறது.இதுதான் நம் முன் உள்ள மிகப்பெரிய சவால்!
இந்த வெறுப்பு
அரசியலும் மக்கள் முன்னே வைக்கப்படும் பொய்யானகருத்தாக்கமும் நமது அரசியல்
சட்டத்தை அழித்திட பயமுறுத்திக் கொண்டுள்ளது!இதற்கு என்ன தீர்வு காணப்போகிறோம்?
நம் முன் உள்ள மிகப்பெரிய சவாலை உள்ளடக்கிய கேள்வி இதுதான்!
தமிழில்: அ.அன்வர் உசேன்
நன்றி: தி சிட்டிசன் மின் இதழ்
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அ..... ஆரம்பிச்சுட்டாங்க
ஆரம்பிச்சுட்டாங்க அடாவடி ஆட்டத்தை
கர்னாடக மாநிலம் தட்சிண கன்னடா தொகுதியில் பாஜக வெற்றி
பெற்றதைக் கொண்டாட சென்ற வெற்றி ஊர்வலத்தின் ஒரு
பகுதியாக சுருள்படி என்ற இடத்தில் உள்ள மசூதியருகே
வெடி வெடித்து அந்த மசூதியின் மீது கல்லெறிந்து தாக்குதல்
நடத்தி கண்ணாடிகள், மேடைகள் ஆகியவற்றை பாஜக
தொ(கு)ண்டர்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த
ஒரு மௌல்வியையும் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.
அதே பகுதியில் இன்னொரு மசூதிக்குள் புகுந்தும் தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
முதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
மோடி பதவியேற்கும் முன்பே அடாவடியை துவக்கி விட்டார்கள்.
இனி போக, போக ?????????????
மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்கவும்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள பதிவு 18.05.2014 அன்று எழுதியது.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகாவது கொஞ்சமாவத் திருந்தி இருப்பார்களா என்று பார்த்தால் நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்று முன் தினம் மூன்று இஸ்லாமியர்களை மாட்டுக் குண்டர்கள் அடித்து நொறுக்கியுள்ளார்கள்.
நேற்று டெல்லி அருகே உள்ள குருகிராமில் ஒரு இஸ்லாமிய வாலிபனை அவனது குல்லாவை கழற்ற வைத்து "ஜெய் ஸ்ரீராம்" என்று முழங்கச் சொல்லியுள்ளார்கள். அந்த வாலிபன் மறுத்ததால் அடித்து கொடுமைப் படுத்தியுள்ளார்கள்..
திரிபுராவிலும் மேற்கு வங்கத்திலும் ரௌடிகள் வெறியாட்டம் தொடர்கிறது.
அடுத்த ஐந்தாண்டுகளும் வன்முறையால் நிரம்பி வழியப் போகிறது.
இப்படி ஒரு பாசிஸக் கும்பலுக்கு வோட்டு பட்ட மக்களின் மன நலன் நிச்சயமாக ஆய்வுக்குட்படுத்தப் பட வேண்டிய ஒன்று.
Sunday, May 26, 2019
உங்க ஆணியே வேண்டாம் கண்ணுங்களா
இந்த சங்கி மட்டுமல்ல, ஒவ்வொரு சங்கியுமே இப்படித்தான் தெனாவெட்டாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் கை கூப்பி மன்றாடுகிறேன்.
தயவு செய்து இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து விடுங்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில் மோடி தமிழகத்திற்கு கொண்டு வந்த ஆணிகள் எல்லாமே தேவையற்ற ஆணிகள்தான்.
மதுரையில் ஏ.ஐ.ஐ.எம்.எஸ் க்கு அடிக்கல் நட்டிட்டு அம்போ என்று போன கதைதான் உங்க லட்சணம். இதுல ஆஸ்பத்திரியே கட்டி முடிச்சாச்சுன்னு முட்டாள்தனமா ஒருத்தன் வீடியோல பேசி, தமிழர்களை முட்டாப்பசங்க என்று சொல்கிறான்.
மீத்தேன், ஹைட் ரோ கார்பன், பெட் ரோ மண்டலம், எட்டு வழிச் சாலை, சாகர் மாலா என்று எல்லாமே வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்காக தமிழக மக்களை அழிக்கும் திட்டங்கள்தான்.
ஸ்டெரிலைட்டிற்காக மரண தூதுவனாய் செயல்பட்டதை மறந்து விட முடியுமா?
தமிழகத்தின் வேலை வாய்ப்புக்களை மற்றவர்களுக்கு மடை மாற்றி விட்டதையும்தான் . . .
அதனால்தான் சொல்கிறேன்.
உங்கள் அழித்தொழிப்பு திட்டங்கள் எதுவும் எமக்கு தேவையில்லை.
தமிழகத்தின் வரிப்பணம்தான் மத்தியரசுக்கு சென்றுள்ளது. ரோஷம் உள்ளவராக இருந்தால் அதைத் தொடாமல் எங்களுக்கே கொடுத்து விடுங்கள்.
Saturday, May 25, 2019
அது ரஜனி டயலாக் ராசா . . .
எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் மக்களுக்கு வாழ்வளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, வாழ்வைப் பறிப்பதாக இருக்கக் கூடாது.
மக்களின் வாழ்விடங்களை சுடுகாடாக மாற்றும் திட்டங்களை கொண்டு வந்து விட்டு அவை இல்லாவிட்டால் தமிழகமே சுடுகாடாகி விடும் என்று சொல்வது ஆணவம், அராஜகம்.
அன்று தூத்துக்குடி போய் வந்து ரஜனிகாந்த் சொன்ன அதே வசனத்தை இன்று சிவகங்கையில் தோற்றுப் போன எச்.ராசாவும் சொல்கிறார்.
நீங்கள் கொண்டு வரும் திட்டங்கள்தான் தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்றும், அவற்றுக்கு எதிரான போராட்டங்கள் அல்ல.
பெரு முதலாளிகளிடம் வாங்கிய எலும்புத்துண்டுகளுக்காக நன்றாகவே வாலை ஆட்டுகிறார்கள்.
Friday, May 24, 2019
கோவை வெற்றியும் சாதாரணமானதல்ல
கோவை
மக்களவைத் தொகுதியில் தோழர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியும் நிறைவும்
தருகிற வெற்றி.
கோவையின்
காற்றில் கூட மத வெறி நச்சை கலந்தவர்கள் சங்கிகள். ஒரு பக்கா கிரிமினலான சி.பி.ராதாகிருஷ்ணன்
பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அந்த தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட போதே
மனதிற்குள் ஒரு சின்ன கலக்கம் இருக்கத்தான் செய்தது.
சசிகுமார் என்பவர் அசிங்கமான காரணத்தால் அவர்கள் ஆட்களாலேயே கொல்லப்பட்டிருந்தாலும் அந்த மரணத்தை பயன்படுத்தி கலவரம் நடத்தியவர்கள்
அண்டா பிரியாணி திருடர்கள். கலவரம் செய்வதற்கென்றே பிறந்தவர்கள், செய்து கொண்டே இருப்பவர்கள்.
தேர்தல்
ஆணையத்தின் கூட்டணியோடு அனைத்து அராஜகங்களையும் கட்டவிழ்த்து விட்டு காயிர் போர்ட்
சேர்மனாக ஊழல் செய்த சி.பி.ஆரை வெற்றி பெற வைக்க முயற்சிப்பார்கள் என்பதனால் ஏற்பட்ட
கலக்கம்.
தண்ணீர்
காண்ட்ராக்ட் எடுத்துள்ள பன்னாட்டு கம்பெனி,
யானை வழிப்ப் பாதை உள்ளிட்ட வன நிலங்களை ஆக்கிரமித்துள்ள சாமியார்கள் மற்றும் கல்வித்
தந்தைகள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கோவைக்கு மக்களவை உறுப்பினராக வரக்கூடாது
என்று துடிப்பார்கள்.
இத்தனையையும்
மீறி தோழர் பி.ஆர்.நடராஜன் ஒரு லட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரத்திற்கும் மேலான வாக்குகள்
வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சாதரண விஷயமா என்ன?
ஏற்கனவே
மக்களவை உறுப்பினராக தடம் பதித்த தோழர் பி.ஆர்.நடராஜன் அவர்களின் பணி மீண்டும் சிறக்க
வாழ்த்துக்கள்
சிதம்பர வெற்றி சிறப்பானது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தோழர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அவரது வெற்றியின் வாக்கு வித்தியாசம் குறைவுதான். நிலைமை மாறிக் கொண்டே இருந்தது. பாஜகவின் பிரதான கூட்டாளியான தேர்தல் ஆணையம் அந்த வெற்றியை தடுக்க முடியுமா என்று முயன்றது. தாமதிக்கத்தான் முடிந்தது.
எப்படியாவது தோழர் திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும் என்று கடுமையாக முயன்றார்கள். பணம் பாதாளம் தாண்டியும் பாய்ந்தது. அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தவர்கள் மிரட்டப் பட்டார்கள். ஜாதி வெறி நச்சாக பரப்பப் பட்டது. இதற்கெல்லாம் சான்று தேர்தல் நாளன்று பொன்பரப்பியில் நடைபெற்ற வன்முறைக் கலவரம்.
அன்புமணி தோல்வி எவ்வளவு முக்கியமோ, அதை விட தோழர் திருமாவளவின் வெற்றி முக்கியம்.
இறுதியில் அது சாத்தியமாகி விட்டது.
வாழ்த்துக்கள் தோழர் திருமா.
உங்கள் குரல் டெல்லியில் வலிமையாய் ஒலிக்கட்டும்
மதுரைக்காரங்கடா . . .
பரம்பின்
குரல் இனி டெல்லியில் . . .
சுட்டெரிக்கும்
அனலையும் மீறி குளிர்த் தென்றல் வருடிப் போகும் சுகமாய் அமைந்தது தோழர் சு.வெங்கடேசன்
அவர்களின் வெற்றி.
தமிழகத்தின்
குரல் வேள்பாரி நாயகன் மூலம் வலிமையாய் ஒலிக்கும்.
மதுரை
மண்ணின் மைந்தர்கள் “நாங்க மதுரைக்காரங்க” என்று பெருமிதம் கொள்வதற்கான இன்னொரு காரணமாக அமைந்த
இந்த வெற்றியை தந்த அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
Thursday, May 23, 2019
ராஜீவ் காந்தி கொலையான அந்த இரவில்
அந்த இரவு நானும் ராமலிங்கம் என்ற தோழரும் நெய்வேலி அமராவதி திரையரங்கில் வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தை பத்தாவது முறையாக இரவுக் காட்சி பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் நிதானமாக டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம்.
அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லை. நெய்வேலி ஊழியர் குடியிருப்பில் ஆட்டோமேடிக் பூட்டு என்பதால் கதவை திறக்க வீட்டில் யாரையும் தொந்தரவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. காலை ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது மட்டுமே தெரிந்தது. அவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து ஃபிரிட்ஜில வச்சுக்குங்க, இனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி விட்டு போனார்.
ஒரு அனிச்சை செயலாக நானும் விஸ்வேஸ்வரராவ் என்ற தோழரும்
பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க
விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை
தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபிஐ, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு என அத்தனை கட்சி, சங்கங்களின் கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.
அதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும்
கை வைக்கவில்லை.
அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.
அன்றைய நாள் முழுதும் ரௌடிகள் ராஜ்ஜியம்தான். மாலை மெயின் பஜார் பக்கம் சென்றால் அப்போதும் களேபரங்கள் ஓயவில்லை. பேனர்களை வெட்டி சாய்த்து
தீயிட்டு கொளுத்திக் கொண்டிருந்தார்கள்.
போலீஸ் கூட கையில் குண்டாந்தடிகளோடு வந்தது. அராஜகத்தில்
ஈடுபட்டவர்களை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப்
போன்றவர்களை விரட்டுவதில்தான் தன் வீரத்தைக் காண்பித்தது.
அன்று நடந்த படுகொலை இந்திய அரசியலின், பொருளாதாரத்தின் திசை வழியை மாற்றியது என்பதும் முக்கியமானது.
மீள் பதிவு : சில கூடுதல் வரிகளின் இணைப்போடு
21.05.2019 அன்று பகிர்ந்து கொள்ள வேண்டியது, கொஞ்சம் தாமதமாக
ஒரு அனிச்சை செயலாக நானும் விஸ்வேஸ்வரராவ் என்ற தோழரும்
பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க
விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை
தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபிஐ, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு என அத்தனை கட்சி, சங்கங்களின் கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.
பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க
விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை
தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபிஐ, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு என அத்தனை கட்சி, சங்கங்களின் கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.
அதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும்
கை வைக்கவில்லை.
கை வைக்கவில்லை.
அது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.
அன்றைய நாள் முழுதும் ரௌடிகள் ராஜ்ஜியம்தான். மாலை மெயின் பஜார் பக்கம் சென்றால் அப்போதும் களேபரங்கள் ஓயவில்லை. பேனர்களை வெட்டி சாய்த்து
தீயிட்டு கொளுத்திக் கொண்டிருந்தார்கள்.
தீயிட்டு கொளுத்திக் கொண்டிருந்தார்கள்.
போலீஸ் கூட கையில் குண்டாந்தடிகளோடு வந்தது. அராஜகத்தில்
ஈடுபட்டவர்களை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப்
போன்றவர்களை விரட்டுவதில்தான் தன் வீரத்தைக் காண்பித்தது.
ஈடுபட்டவர்களை விட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எங்களைப்
போன்றவர்களை விரட்டுவதில்தான் தன் வீரத்தைக் காண்பித்தது.
அன்று நடந்த படுகொலை இந்திய அரசியலின், பொருளாதாரத்தின் திசை வழியை மாற்றியது என்பதும் முக்கியமானது.
மீள் பதிவு : சில கூடுதல் வரிகளின் இணைப்போடு
21.05.2019 அன்று பகிர்ந்து கொள்ள வேண்டியது, கொஞ்சம் தாமதமாக
21.05.2019 அன்று பகிர்ந்து கொள்ள வேண்டியது, கொஞ்சம் தாமதமாக
Subscribe to:
Posts (Atom)