இன்சூரன்ஸ் வார விழாவை ஒட்டி நேற்று ஊழியர்களுக்கு பாட்டுப் போட்டி நடந்தது. அதிலே ஒரு தோழர் சொர்க்கம் படத்தில் வரும் "பொன்மகள் வந்தாள்" பாடலை பாடினார்.
அதைக் கேட்டவுடன் நினைவுக்கு வந்த ஒரு சம்பவத்தை இங்கே பகிர்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு உள்ளே அறையில் இருந்த என்னை என் மகன் "அப்பா இங்கே உடனே வா" என்று அழைத்தான். பார்த்தால் தொலைக்காட்சியில் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படத்தில் ரீமிக்ஸ் என்ற பெயரில் "பொன்மகள் வந்தாள்" பாடலை கொலை செய்து எடுத்த பாடலை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
ரீமிக்ஸ் என்பதன் மீது உச்சகட்ட கோபம் வந்த தருணம் அது. ஒரு நல்ல பாடலை இப்படி கெடுத்து அசிங்கப்படுத்தி விட்டார்களே என்று ஆத்திரம் ஆத்திரமாக வந்து தொலைக்காட்சியை அணைத்தாலும் கோபம் குறையவில்லை.
உடனடியாக கடைக்குச் சென்று சொர்க்கம் படத்தின் வி.சி.டி வாங்கி வந்து ஒரிஜனல் பாடலை பார்த்த பின்பே மனம் கொஞ்சம் அமைதியானது.
அந்த பாடலை நீங்களும் இங்கே கேட்டு ரசியுங்கள்.
எம் எஸ் வி மேற்கத்திய இசையில் விளையாடிய அருமையான பாடல்.
ReplyDelete