“இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காக
உயிரையும் கொடுப் பார்கள்,” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறி யிருப்பது
பொறுப்பான பேச்சு என்பதாகப் பார்க்கப்படுகிறது. அவர் இந்த மக்களின் தேசப்
பற்றை இப்போதுதான் கண்டுபிடித்தாரா என்றுகேட்கவும் வைக்கிறது. இந்தியாவில்
அல் கொய்தா கிளை துவங்கப்பட்டிப்பதாகச் செய்திகள் வந்துள்ளது தொடர்பாக,
சிஎன்என் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்த மோடி, “தனது ராகத்துக்கு இந்திய
முஸ்லிம்கள் ஆடுவார்கள் என்று அல் கொய்தா கருதுமானால் தோற்றுவிடும்,” என்று
குறிப்பிட்டிருக்கிறார்.நாட்டின் பிரதமராக அவர் இவ்வாறு கூறி யிருப்பது
நல்லதுதான். கிறிஸ்துவர்கள் உள் ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்
இதுபொருந்தும்.
நாட்டை நேசிப்பதில் சிறுபான்மையினர் எல்லா வகைகளிலும் பெரும்பான்மை யினருக்கு நிகரானவர்கள்தான் என்ற எண் ணத்தை ஏற்படுத்துகிற இப்படிப்பட்ட கருத்து முக்கியமானது. சிறுபான்மையினர் மீது கிளப்பிவிடப்படும் அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு இது உதவ வேண்டும் என்றே நல்லிணக்கத்தை நாடுவோர் எதிர் பார்க்கிறார்கள்.ஆனால், பிரதமர் மோடி இதை அழுத்தமாகச் சொல்ல வேண்டியது அல் கொய்தாவுக்கு அல்ல, அவரும் அவரது கட்சியும் சார்ந்துள்ள சங் பரி வாரத்தினருக்குத்தான்.
சிறுபான்மை மக்களுக்கு எதிரான பகைமைக் கருத்துகளை தூவி வருவது அவர்கள்தான். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியா இந்துக்களின் நாடு என்றார். இங்கிலாந்து மக்களை இங்கிலீஷ்காரர்கள் என்று சொல்வது போல், ஜெர்மனியில் உள்ள வர்களை ஜெர்மானியர்கள் என்று கூறுவது போல், இந்தியாவில் இருப்பவர்களை இந்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று,இந்தியாவின் சிறுபான்மை மத அடையாளங் களை அழிப்பது போல் பேசினார்.
உ.பி. மாநிலத்தில் யோகி ஆதித்யநாத், “லவ் ஜிஹாத்” என்ற புதிய சொல்லாடலையே உலாவவிட்டு, முஸ்லிம் இளைஞர்கள் மீது பகை வளர்க் கும் பிரச்சாரத்தைச் செய்தார். ம.பி. மாநிலத்தில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் உஷா தாக்குர், நவ ராத்திரி கூட்டு நடன நிகழ்ச்சிகளில் முஸ்லிம் இளைஞர்களை அனுமதிக்கக்கூடாது என்று சொல்லி, பல ஆண்டுகளாக நிலவி வருகிற நல்லிணக்கத்தின் மீது நெருப்பைப் பற்ற வைத் திருக்கிறார். பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் சிறுபான்மையினருக்கு எதிராக நஞ்சு கக்கியது பற்றியும் விரிவாகச் சொல்ல முடி யும்.
தலைவர்களின் வழியில் பல்வேறு இந்துத்துவா அமைப்புகளும் பகை வளர்ப்புக் கைங் கரியங்களில் ஈடுபட்டிருக்கின்றன.பிரதமராக இதையெல்லாம் மோடி கொஞ்சமும் கண்டுகொண்டதில்லையே! அந்தப் பின் னணியில், நீண்ட காலமாக மத நல்லிணக்கம் பேணத் தவறியதற்காக என விசா வழங்க மறுத்துவந்த அமெரிக்க அரசு, தற்போது அழைப்பு விடுத்திருப்பதால் மதச்சார்பற்றவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் இவ்வாறு பேசு கிறாரா என்ற ஐயம் மேலோங்குகிறது.
ஒரு புறம் ஆர்எஸ்எஸ் திட்டப்படி ஒற்றை மத ஆதிக்கத்திற்கான செயல்திட்டங்களை நிறைவேற்று வது, இன்னொருபுறம் சிறுபான்மையினருக்கான தேசப்பற்றுச் சான்றிதழ் வழங்குநராக மாறுவது என்ற மோடியின் இரட்டை வேடத்தை நாடு புரிந்து கொள்ளவே செய்யும்.
22.09.2014 இதழின் தலையங்கம்

No comments:
Post a Comment