Friday, September 19, 2014

மனங்கவர்ந்த கலைஞன் அவன்

 http://www.emando.com/images/players/Srinivas.jpg

மாண்டலின் எனும் வாத்தியம்
கொண்டு நம் அனைவரின்
மனதையும் கொள்ளையடித்த
மந்திரவாதி அவன்.

மேலை நாட்டு வாத்தியத்தில்
இந்திய இசையை 
கடத்தி வந்தான்.

அனுபவம் மிக்க 
பலருக்கு 
புது அனுபவம்
அளித்தான் அவன்.

நாதஸ்வரத்திற்கு மட்டுமே
துணை நின்ற
தவிலை தனக்கும்
இசைக்க வைத்தான்.


புன்னகைத்த முகத்தோடு
ராகங்களை தன் வசப்படுத்திய
அற்புத கலைஞன் அவன்.

பரவச அனுபவத்தை 
ஒவ்வொரு பாடலிலும்
கொடுத்துக் கொண்டே 
இருந்த உன்னதக் கலைஞன்.
 
வலையப்பட்டியும் கன்னியாகுமரியும்
வினாயக்ராமும் துணை கொண்டு
வாசித்த நாட்களெல்லாம்
நீங்கிடுமா நெஞ்சை விட்டு?
சின்ன வயதில் 
இசைக்க வந்ததால்
சின்ன வயதிலேயே 
மறைந்தும் போனானோ?

மாண்டலின் என்றால் 
ஸ்ரீனிவாஸ் என்றுதான்
என்றென்றும் உலகம் சொல்லும்.

உன் இசையின் ஒலித்தட்டுக்கள்
என்றென்றும் உன் புகழ் பரப்பும் 
 
 
 

3 comments:

  1. மாண்டலின் இசையின் ஓசையில்
    சீனிவாசன் தொடர்ந்து வாழ்வார்

    ReplyDelete
  2. What a pity. God is so merciful all religions say....

    ReplyDelete