ஜெ தீர்ப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுதும் அதிமுககாரர்களின் அராஜகம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க மக்களே வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.
வேலூர் சத்துவாச்சாரி, வள்ளலார் பகுதிகளில் என்ன நிலவரம் என்று பார்க்கலாம் என் ஒரு சிறிய உலா சென்றேன்.
ஒரு மருந்துக் கடை, இரண்டு தள்ளு வண்டி பழக்கடைகள் தவிர சத்துவாச்சாரி பகுதியில் பிரதான சாலைகளில் எந்த ஒரு கடையும் திறந்திருக்கவில்லை. வங்கிகள் ஏ.டி.எம் களைக் கூட ஷட்டர் போட்டு மூடியிருந்தன. நொடிக்கு ஒரு ஆட்டோ கடந்து போகும் சத்துவாச்சாரியில் கண்ணிற்கு எட்டிய தூரம் வரை ஒரு ஆட்டோ கூட ஓடவில்லை.
ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது போல மக்களின் நடமாட்டம் கொஞ்சம் கூட இல்லை. காக்கிச்சட்டைகள் கூட கண்ணில் தென்படவில்லை. பாவம் அவர்களுக்கு என்ன முக்கியமான வேலையோ? என்ன உத்தரவோ?
புயலுக்குப் பிந்தைய மயான அமைதியோடு இருந்த சத்துவாச்சாரி பகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொன்டிருந்தது பல நாய்களும் சில மாடுகளுமே.
ஆனால் கடமையே கண்ணாக ஒரே ஒரு பெட்ரோல் பங்க் மட்டுமே மிகுந்த தைரியத்தோடு திறந்திருந்தது.
அதிமுகவின் முன்னாள் ராஜ்யசபை உறுப்பினருக்கு சொந்தமானது அந்த பெட்ரோல் பங்க்
பின் குறிப்பு : படம் இன்றைய தினத்தது அல்ல.
No comments:
Post a Comment