Thursday, September 25, 2014

இது ஒன்றும் உங்கள் சாதனையல்லவே மோடிஜீ?





இந்திய விஞ்ஞானிகளின் மகத்தான சாதனை செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யானை அனுப்பியது. இது தங்கள் ஆட்சியின் நூறு நாள் சாதனை என்று பாஜககாரர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மோடி கூட “ நாங்கள் துணிச்சலோடு முயற்சித்தோம்” என்று அவர் பொதுவாக அரசாங்கத்தைச் சொன்னாரா அல்லது தன்னைச் சொல்லிக் கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக் கொள்ளக் கூடிய ஒருவர் அரசாங்கம் என்று சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் முடிவெடுக்கப்பட்டு முந்தைய ஆட்சிக் காலத்திலேயே பணிகள் துவக்கப்பட்டு முந்தைய ஆட்சிக் காலத்திலேயே  விண்வெளிக்கும் ஏவப்பட்ட மங்கள்யானை தங்களின் சாதனை என்று எப்படி கூச்சமே இல்லாமல் சொல்லிக் கொள்ள முடிகிறது என்று எனக்கு புரியவில்லை.

அறிவியலுக்கும் பாஜகவிற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்ன?

செவ்வாய் தோஷம் என்று கதை சொல்லும் ஜோதிடத்தை ஒரு அறிவியல் பாடம் என்று கற்றுக் கொடுக்க வாஜ்பாயின் ஆட்சிக்காலம் முடிவு செய்ததே….

அறிவியல் பார்வை இருந்திருந்தால் ராமர் பாலம் என்று சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்திருக்க மாட்டார்கள்.

அப்படி இருக்கையில் மங்கள்யான் எங்கள் சாதனை என்று சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.

பாராட்டுக்கு உரியவர்கள் கடுமையாக உழைத்திட்ட விஞ்ஞானிகள் மட்டுமே.

4 comments:

  1. கசப்பு மருந்தான ரயில் கட்டண உயர்வும் பட்ஜட்டிற்கு முன் வரி உயர்வும் மட்டும் தான் முந்தைய காங்கிரஸ் அரசின் செயல் அவர்க்ளது காலத்தில் செய்த செயல்களின் பலங்கள் (positive) மட்டும் எனது சாதனை அட எங்கேயோ கேட்ட குரல் (தமிழ் நாட்டை சொல்லவில்லை)

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. விஞ்ஞானிகளைப் பாராட்டுவோம்

    ReplyDelete
  4. காவிக் கூட்ட பிரதிநிதி ஒருவரின் பின்னூட்டத்தில் தமிழ் மணந்தது. அகற்றி விட்டேன்.
    சிந்தனை, செயல், எழுத்து எல்லாவற்றிலும் நாற்றமடிக்கிற பேர்வழிகள்

    ReplyDelete