Monday, September 15, 2014

தமிழருவியின் மொழியின் தாய் சமஸ்கிருதமா?

''நாட்டின் 55 சதவீத மக்கள் இந்தியில் பேசுகின்றனர். அதே நேரத்தில் 80 முதல் 90 சதவீத மக்கள், தாய்மொழியாக இல்லாவிட்டாலும் இந்தியைப் புரிந்து கொள்கின்றனர். இந்தி நாட்டின் பொதுமொழியாகும். சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாய். அதே நேரத்தில் இந்தி மற்றும் மற்ற மாநில மொழிகள் சகோதரிகள்''

என்று திருவாய் மலர்ந்துள்ளார்  திருவாளர்  ராஜ்நாத்சிங்.  ஒற்றை பண்பாட்டை  திணிப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட பாஜக அரசு இதையும் சொல்லும், இதற்கு மேலும் சொல்லும். ஹிந்தியைத் தவிர வேறு எந்த மொழியாவது   பேசினால் வாயிலேயே  அடிப்போம் என்று சொன்னாலும் அதிர்ச்சியாவதற்கோ, ஆச்சர்யப்படுவதற்கோ ஏதுமில்லை.

ஆனால் பாஜக ரொம்ப, ரொம்ப, ரொம்ப நல்ல கட்சி என்று சொல்லி அதற்காக தரகு வேலை செய்த, தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் அண்ணன் தமிழருவி மணியன் ராஜ்நாத் சிங் சொன்னதை ஒப்புக் கொள்கிறாரா?

ராஜ்நாத் சிங் சொல்வதை நாங்கள், இடதுசாரிகள், மார்க்சிஸ்டுகள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம், கண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்.

தமிழருவி மணியன் என்ன சொல்லப் போகிறார்?

பாஜகவை ரொம்ப நல்லவங்க என்று சொன்னது தவ்று என்று மக்களிடம் மன்னிப்பு கேட்பாரா இல்லை தெனாவெட்டாகவே விளக்கம் ஏதாவது கொடுப்பார்.

சொல்லுங்கண்ணே, சொல்லுங்க.

 

16 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. அவரது பதிலை எதிர்பார்க்கிறேன்... இந்த கேள்வியை அவரிடம் கேட்கவேண்டுமே

    ReplyDelete
  3. Your view is excellent. Maniayan is madayan.

    ReplyDelete
  4. Commission agent communist talking about tamilaruvi manian? shame.
    However, BJP is wrong in this aspect.

    ReplyDelete
    Replies
    1. இதைச் சொன்னதற்கு நீங்கள்தான் வெட்கப்பட வேண்டும். கம்யூனிஸ்டுகளின் நேர்மையை நேர்மையானவர்களால் மட்டும் உணர முடியும். தியாகத் தீயில் புடம் போடப்பட்டவர்கள் கம்யூனிஸ்டுகள்.

      Delete
  5. தியாகத் தீயில் புடம் போடப்பட்டவர்கள் // திருப்பூர் கோவிந்தசாமி தளி ராமசந்திரன் போன்ற "நேர்மையாளர்களைக்" கொண்டவர்கள் தான் இடதுசாரிகள். இப்படிப் பட்டவர்களை வைத்து எந்த "புடம்" போட்டீர்கள் அய்யா

    ReplyDelete
  6. நன்றி திரு எழில். நீங்களே சரியான உதாரணத்தை அளித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நேர்மையை சொல்லி விட்டீர்கள். கோவிந்தசாமி பற்றியும் ராமச்சந்திரன் பற்றியும் சொல்லியுள்ள உங்களுக்கு அவர்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த நடவடிக்கை பற்றியும் தெரிந்திருக்கும்.

    திருப்பூர் கோவிந்தசாமி தவறு செய்கிறார் என்று தகவல் கிடைத்ததுமே அவர் மீது விசாரணை நடத்தி அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கியது மார்க்சிஸ்ட் கட்சி. சட்டமன்ற உறுப்பினர் இடம் ஒன்று பறிபோய் விடும் என்பதற்காக அவரை கட்சியிலேயே வைத்திருக்கவில்லை.

    அதே போல 2006 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியில் தளி தொகுதி சி.பி.ஐ க்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கட்சி முடிவுக்கு மாறாக சுயேட்சையாக போட்டியிட்ட ராமச்சந்திரனை உடனடியாக மார்க்சிஸ்ட் கட்சி நீக்கியது. அவர் வெற்றிபெற்றதும் மீண்டும் கட்சியில் இணைய வரும் போது அவருக்கு கட்சி கதவைத் திறக்கவில்லை.

    அவரை சி.பி.ஐ இணைத்துக் கொண்டது பற்றி என்னுடைய விமர்சனங்களை இந்த வலைப்பக்க்கத்தில் எப்போதே எழுதி விட்டேன்.

    நீங்கள் சொன்ன இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியதே மார்க்சிஸ்டுகளின் நேர்மைக்கு சான்று.

    ReplyDelete
    Replies
    1. பின்னர விஜயன் மாதிரியான நேர்மையாளர என்ன செஞ்சீங்க?

      Delete
    2. பினராயி விஜயன் மீது பதியப்பட்டது பொய் வழக்கு என்று சொல்லி தள்ளுபடி செய்யப்பட்டது தெரியாதா அனானி? அந்த செய்தியை படிக்காம தூங்கிக்கிட்டு இருந்தீங்களா?

      Delete
  7. கம்யூனிஸ்டுகள் மீது மட்டும் இவ்வளவு விமர்சனம் வைக்கிற திரு எழில் பாஜகவின் ராஜ்நாத்சிங் சொன்னது பற்றி வாய் திறக்காதது ஏனோ? அடிப்படையான பதிவை திசை திருப்பும் நோக்கம் என்னவோ? காவிப்படையின் மோசமான உத்தி அல்லவோ அது?

    ReplyDelete
  8. rajnath is nonsense but for that i cant support communists

    ReplyDelete
  9. i know there are many people still in communist without being caught, when i was working in a company, a strike happened where the manager of the factory supported workers but these union people from CPM pitched in and had very lengthy discussions with owner and finally got money from owner and went to workers, advised them to return to work and also told that manager is an evil. At last what happened the company owner gradually removed workers one by one. it all happened in front of my eye and i was a spectator. dont talk of communists honesty as i had enough of experience

    ReplyDelete
  10. by the by rajnath's speech is non sense

    ReplyDelete
    Replies
    1. can you please give the details Mr Ezhil? If anyone had done like this, they will not be spared. You can send to my mail too. ramanraghunandhan@yahoo.co.in

      Delete
  11. It happened 10 years ago after that i switched to IT industry and moved out of TN, i lost all the contacts. Sorry, i could have provided the information if i have any

    ReplyDelete
  12. அந்த நிறுவனத்தின் பெயர், ஊர் ஆகியவையாவது நினைவில் இருக்குமல்லவா? அதை சொல்லுங்கள்.

    ReplyDelete