Thursday, September 4, 2014

சரியில்லை மாண்புமிகு நீதிபதி சதாசிவம் அவர்களே!

 

சிங்கத்தின் தலையாக இருந்த நீங்கள் 
இப்படி ஆட்டின் தாடியாக மாறலாமா?

அரசு செய்த தவறுகளை கண்டிக்கும்
பொறுப்பில் இருந்த நீங்கள் 
இப்படி அரசின் தயவை நாடலாமா?

அரசின் ஒரு அமைச்சகச் செயலாளர்
ஆளுனர்களை மிரட்டியதைப் பார்த்துமா
அந்த பதவிக்கு ஆசைப்பட்டீர்கள்?

நீங்கள் அளித்த தீர்ப்பை விளக்கும்
அவசியம் உங்களுக்கு அசிங்கமாக
தோன்றவில்லையா?

குடியரசுத் தலைவருக்கே  பதவிப் பிரமாணம்
செய்து வைக்கும் பொறுப்பில் இருந்த
உங்களுக்கு உங்களது ஆளுகைக்கு
உட்பட்டவராக இருந்தவர் பதவி அளிப்பதோ
அல்லது பதவிப் பிரமாணம் எடுத்து வைப்பதோ
முரணாக தெரியவில்லையா?

ஆளுனர் பதவி, அந்த பதவி, இந்த பதவி
என்று ஒவ்வொரு நீதிபதியும் ஆசைப்பட
கதவுகளை திறந்து வைத்து விட்டீர்கள்.

அந்த கத்வின் வழியாக நாளை 
நீதி வெளியேறாது என்று 
உங்களால் உறுதியாய் சொல்ல முடியுமா?

மன்னிக்க வேண்டும் நீதியரசர் அவர்களே!
நீதிபதியாய் ஈட்டிய கௌரவத்தை
கொஞ்சம் கொஞ்சமாய் 
தொலைக்கப் போகிறீர்களா
ஆளுனராக மாறி.

 

2 comments:

  1. Reasonable questions.

    ReplyDelete
  2. Comrate, Instead of Corrupted/party person he is for better.and he is having good relation with JJ.

    Seshan

    ReplyDelete