இன்று தொலைக்காட்சியில் இந்த பாடலைப் பார்த்தேன்.
கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு முன்பு வெளியான படம் டிக் டிக் டிக். அப்படத்தில் வரும் மூன்று பாடல்களும் அற்புதமானவை. பின்னணி இசை அதை விட அற்புதம்.
இன்று இப்பாடலை தொலைக்காட்சியில் கேட்ட போது மிகவும் இனிமையாக இருந்தது. பாடலில் மாதவி, ராதா, ஸ்வப்னா ஆகிய மூவரையும் அதிக பட்ச கவர்ச்சியாக பாரதிராஜா பயன்படுத்திக் கொண்டிருப்பார்.
ஆனால் இப்பாடல் இன்றும் மனதில் நிலைத்திருப்பதற்கு அந்த கவர்ச்சி காரணம் இல்லை. இசைஞானியின் இசை, வைரமுத்துவின் வரிகள், ஜானகியின் குரல், நடுவில் வரும் டி.வி.கோபாலகிருஷ்ணனின் இசைக் கோர்வை ஆகியவைதான்.
கவர்ச்சிகரமாக படமெடுக்கப்பட்ட பாடல்கள் பல ஹிட்டாகியுள்ளன. அவை கூடிய சீக்கிரத்திலேயே காணாமலும் போயிருக்கிறது.
கவர்ச்சி இருந்தாலும் இப்பாடல் இன்றும் நிலைத்திருக்கிறது.
அருமையான பாடல்கள்தான் நண்பரே
ReplyDelete