Tuesday, September 2, 2014

ஐயா பேசறதை, அம்மாவைப் பத்தி பேசறதை – வெட்கம் கெட்ட பொழப்புடா



மோடி குரு உத்சவில் பேசுவதை எல்லாரும் கேட்க வேண்டுமென்று சட்டம் போடாத குறையா மிரட்டினாங்க என்று பார்த்தால் அவருக்கு நான் என்ன சளைத்தவரா என்று அம்மா கேட்கிறார்.

"காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி"

என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டியும் பேச்சுப் போட்டியும் நடத்த வேண்டுமாம்.

அதற்காக போடப்பட்ட அரசாணையை இங்கே பாருங்கள்.


 (முக நூல் நண்பர்களுக்கு நன்றி)

எல்லோரும் தங்களைப் பற்றியே எப்போதும் பேச வேண்டும், நினைக்க வேண்டும் என்ற விளம்பர மோகம் வெட்கக் கேடு. அதற்காக அதிகாரத்தையும் அரசு இயந்திரத்தையும் துஷ்பிரயோகம் செய்வது மானக்கேடு.

இப்படியெல்லாம் செய்வதன் மூலம் உங்களது செல்வாக்கு சரியுமே தவிர அதிகரிக்காது என்று அறிவுரை செய்ய அவர்கள் பக்கத்தில் யாருமே கிடையாது.

காக்காக்களுக்கு ஜால்ரா மட்டும்தான் இசைக்கத் தெரியும் போல.



No comments:

Post a Comment