இன்று சென்னையில் ஒரு கட்சித்தோழரின் மகளின் திருமணம் மாலையில் தோழர் ஜி.ஆர் தலைமையில் நடைபெற்றது. மதியம் ஒரு ட்வேராவில் ஒன்பது தோழர்கள் புறப்பட்டு போய்விட்டு வருவது என்று முடிவெடுத்திருந்தாலும் செல்வதா, வேண்டாமா என்று காலை முதல் ஒரு யோசனை இருந்து கொண்டே இருந்தது. கடைசியில் தைரியமாக புறப்பட்டு இதோ பாதுகாப்பாக வீடும் திரும்பி வந்தாகியும் விட்டது.
யோசனைக்கான காரணம் கடந்த 30 ஏபரல் 2013 அன்று தைலாபுரம் தோட்டத்து வாசலில் பாமக கும்பலிடமிருந்து தப்பித்த அந்த அனுபவம்தான். இம்முறை வழியில் எவ்வித சிக்கலும் இல்லை.
ஆனால் இந்த பயணத்தில் கவனித்த முக்கியமான விஷயம் ஒன்று உண்டு.
சென்னை பெங்களூர் நாற்கர சாலை இருபத்தி நான்கு மணி நேரமும் மும்முரமாய் போக்குவரத்து நடக்கும் சாலை. அரசுப் பேருந்துகள், லாரிகள், கண்டெயினர் லாரிகள், ஆம்னி பேருந்துகள், குட்டி யானை லாரிகள், அதி வேக சொகுசு கார்கள் முதல் சாதாரண கார்கள் வரை சதாசர்வ காலமும் விரைந்து கொண்டே இருக்கும்.
ஆனால் இன்றோ நாங்கள் சென்னை போகும் போது கவனித்தது என்னவென்றால் சென்னை நோக்கி ஒரு பேருந்தும் ஓடவில்லை. சென்னையிலிருந்து ஆரணிக்கு மூன்று பேருந்துகளும் காஞ்சிபுரத்திற்கு இரண்டு பேருந்துகளும் எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருந்தது. கார்கள் வழக்கத்தில் 25 % ஓடிக் கொண்டிருந்தது. 50 % லாரிகள் ஓடின. கண்டெயினர்களும் குட்டி யானைகளும் காணவில்லை.
சென்னையில் கூட மிக மிக குறைந்த டவுன் பஸ்களே ஓடின. ஆட்டோக்கள் கூட முழு வீச்சில் இயங்கவில்லை.
திரும்பி வரும் போது நிலைமை இன்னும் மோசம். இரண்டே இரண்டு ஆம்னி பஸ்கள் மட்டும் சென்னையை நோக்கி சென்று கொன்டிருந்தது. கார்கள் கொஞ்சம் ஓடின. ஹோசூரை நோக்கி ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே கண்ணில் பட்டது. ஒரு கர்னாடக அரசு சொகுசுப் பேருந்தை ஸ்ரீபெரும்புதூர் டோல்கேட் அருகில் காக்கிச்சட்டைகள் ஓரம் கட்ட வைத்தார்கள். பிறகு அந்த பேருந்து எப்போது புறப்பட்டதோ?
சொந்த கார் உள்ளவர்களோ அல்லது எங்களைப் போல வாடகைக் காருக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு வசதி உள்ளவர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய அளவிற்குத்தான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழ்நிலை இப்போது உள்ளது.
சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு அராஜகம் தலை தூக்கும் வேளையில் சாமானிய மக்களின் வாழ்க்கைதான் தாக்கப்படுகிறது.
Thambi, carukku kudutha kasai rendu yelaikku kodukkalame?!?!?!
ReplyDeleteபெயர் சொல்ல் துப்பில்லாதவ்ன் எனக்கு அண்ணனா? தூ....
ReplyDeleteபஸ்ஸே ஓடலேனு சொல்றேன். நீ யாருக்காவது ஏதாவது
நல்லது செஞ்சிருக்கயா? முகம் காண்பிக்க முடியாதவன்
முப்பது பேருக்கு அட்வைஸ் செய்வானாம். ஓடிப் போயிடு