நேற்று ஹிந்து நாளிதழில் பார்த்த அதிர்ச்சிச் செய்தி.
குஷ்பூ என்ற இரண்டரை வயதுக் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்டது என்றும் கடவுளின் அவதாரம் என்று அந்த குழந்தையைக் கருதி அந்த குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை புனித தலமாக கருதி மக்கள் குவியத் தொடங்கி விட்டார்கள் என்பதுதான் அச்செய்தி.
ராஜஸ்தானில்தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. காவல்துறை தலையிட்டு அங்கே அமைக்கப்பட்ட தற்காலிக பந்தலை பிய்த்தெறிந்து அந்த குழந்தையின் உடலையும் சவப்பரிசோதனை செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளது.
கடவுளின் அவதாரம் என்று முதலில் சொன்ன தந்தை தீரா வியாதியுடைய குழந்தை அது என்று சொன்னாராம். என்ன முரண்பாடு பாருங்கள். கடவுளின் அவதாரமாக உருவெடுத்து உலகை ரட்சிக்க பிறந்த குழந்தைக்கு தீராத வியாதிகளாம்?
பிள்ளையார் பால் குடிக்கிறது, சுவற்றில் குங்குமம் கொட்டுகிறது, வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்று கதை கட்ட பல மோசடிப் பேர்வழிகள் இருக்கிறார்கள்.
அவர்களுக்கெல்லாம் மூலதனம் அதை அப்படியே நம்பி அவர்கள் சொல்வதை செய்யும் மக்கள்தான்.
அறிவியல் எவ்வளவோ வளர்ந்தாலும் இந்த சாமியார் பிசினஸ் கொடி கட்டிப் பறக்க காரணம் இந்த மோசடிப் பேர்வழிகளை நம்பி ஏமாறுபவர்கள்தான்.
ராஜஸ்தான் எவ்வளவோ பின் தங்கியிருக்கிறது என்பதற்கு முன்பு சதி மாதா வழிபாடு உதாரணம். இன்னும் அவர்கள் முன்னேறவில்லை என்பதற்கு இச்சம்பவம் உதாரணம்.
என்ன கொடுமை நண்பரே
ReplyDeleteபாவம் அந்தப் பிஞ்சுக் குழந்தை
இந்த அளவு அவலம் இந்து மதத்தை போல் மற்றவற்றில் இல்லை.இந்த மாதிரி முட்டாள்களாகவே இருக்க வேண்டும் என்றும் படித்து புத்திசாலிதனமாக வளமாக உள்ள இந்துக்கள் நினைப்பதால் இப்படி உள்ளது.
ReplyDeleteஇத்தகைய செயல்கள் கொடுமையானவை என்று கல்கியோ,துக்ளக்கோ, எழுத முற்படுமா.
படித்தவன் செய்யும் கொடுமைகளே இந்நாடு இவ்வளவு மோசமாக இருக்க காரணம் .
அவன் எதற்கு படித்து இருக்க வேண்டும். உன் கடவுள் எங்கோ இருந்து போகட்டும். இருப்பதாக எண்ணி அதை எதற்கோ தினம் துதி பாடி விட்டு போ. ஆனால் இங்குள்ள மனிதரிடம் இருந்து எல்லா சுகங்களையும் அனுபவித்து விட்டு அது எங்கோ உள்ளது கொடுத்தது என்று நம்பி திரிகிறார்கள் ..அவலம்.