அது ஒரு சிறிய ஊர். ஒரு
வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது. சாட்சி சொல்ல ஒரு மூதாட்டி
அழைக்கப்பட்டுள்ளார். அவரது நினைவுகள் சரியாக உள்ளதா என்று சோதனை செய்ய நினைத்த
குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் அந்த மூதாட்டியைப் பார்த்து
“ நான் யார் தெரியுமா?”
என்று கேட்கிறார்.
அதற்கு அந்த மூதாட்டி
“உன்னைப் பற்றி
தெரியாதா எனக்கு? நீ சுப்ரமணி. உன்னை சின்ன வயசுலேந்தே தெரியும். சின்ன வயசுல உங்க
பாட்டி சுருக்குப் பையில இருந்த காசை திருடி அடி வாங்கினவன். ஸ்கூல் படிக்கும்
போது பீடி குடிச்சதுக்காக உங்கப்பா உன்னை பின்னி எடுத்தாரு. காலேஜுக்கு கட்டடிச்சு
சினிமா போய் மாட்டிக்கிட்டவன். இப்பவும் ஒழுங்கா வீட்டுக்குப் போகாம ஊர்
சுத்திக்கிட்டு உன் பெண்டாட்டிக்கிட்ட திட்டு வாங்கற. ஒழுங்கா படிக்காம
பிட்டடிச்சி பாஸ் செஞ்சுட்டு வக்கீல்னு ஊரை ஏமாத்திக்கிட்டு இருக்க. எதுக்கும்
லாயக்கில்லாதவன்”
அப்படியே நிலை குலைந்த
அந்த வழக்கறிஞர்.
அரசுத் தரப்பு
வழக்கறிஞரைக் காண்பித்து இவரைத் தெரியுமா என்று கேட்க அந்த மூதாட்டி தொடர்ந்தார்.
“இவனைத் தெரியாதா? இவன்
கிச்சு. இவன் சரியான சோம்பேறி. குடிகாரன், இவனும் உன்னை மாதிரியே ஒழுங்கா படிக்காம
தட்டுத்தடுமாறி பாஸ் செஞ்சவன். லஞ்சம் கொடுத்து கவர்ண்மென்ட் லாயராகி எல்லா
கேஸிலயும் சொதப்பி தோத்திக்கிட்டு இருக்கான். இன்னும் கூட இவனைப் பத்தி தெரியும்
கோர்ட்டுங்கறதனால சொல்லாம இருக்கேன்”
அரசு வக்கீல் அப்படியே
மயக்கமடையும் நிலைக்கு போய் விட்டார்.
இரண்டு
வழக்கறிஞர்களையும் தன்னருகே அழைத்த நீதிபதி மெல்லிய குரலில் ஆனால் கடுமையாக
சொன்னார்
“என்னைக் காண்பிச்சு
இவரைத் தெரியுமானு இரண்டு பேரில யாராவது அந்த பாட்டிக்கிட்ட கேட்டீங்க, நீதிமன்ற
அவமதிப்புனு சொல்லி இரண்டு பேரையுமே ஜெயில்ல போட்டுடுவேன்”
(முகநூலில் நான் படித்த
அமெரிக்க பின்னணியிலான கதையின் இந்திய வடிவம் இது)
சரி இதை எழுதினதால என் பெயரில நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்திடாதல்லவா?
Great fortunately it is perfectly matching to india too
ReplyDeleteRegards
Seshadri
The old lady was not asked about you......
ReplyDeleteOf course not on you too Mr Anony
Delete"சரி இதை எழுதினதால என் பெயரில நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்திடாதல்லவா?"---------do you like it or what?
ReplyDelete