Wednesday, September 3, 2014

டோனி, இவங்களை எல்லாம் நம்பாதீங்க

 

நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிற ஒரு விஷயத்தை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிரூபணம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு இரண்டு போட்டியில் தோற்றால் கண்டபடி திட்டி கழுவி கழுவி ஊற்றுவதும்  அடுத்து இரண்டு போட்டியில் வென்றால் உடனே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதுமே பிழைப்பாகப் போய் விட்டது.

டோனியை கேப்டன் பதவியிலிருந்து உடனடியாக தூக்க வேண்டும்  என்று ஒரு வாரம் முன்பாக சொன்னவர்கள் இப்போது "தல போல வருமா" என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

நிலையற்ற தன்மை கொண்டது இந்திய கிரிக்கெட் அணி என்றால் அதை விட  நிலையற்ற குணாம்சம் கொண்டவர்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். 

ஆகவே டோனி இவங்களையெல்லாம் நம்பாதீங்க,

மாலை போட்டுக் கொண்டே கல்லாலும் அடிப்பாங்க
 

No comments:

Post a Comment